புதிதாக 22 பேருக்கு கொவிட்-19

1 mins read
7447951f-5a6e-499d-91a3-c2ab05320931
-

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 22 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 16ஆம் தேதி முதலான தினசரி எண்ணிக்கையில் இது ஆக குறைவானது. அந்தத் தேதியில் தினசரித் தொற்று 17 ஆக இருந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வேலை அனுமதி அட்டை இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி மூவர் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.