உயர் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

உயர் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

1 mins read
6c2a2484-582e-4ad6-a61a-a83ee9236b50
-

கொவிட்-19 நெருக்கடியிலும் உயர்தொழில்நுட்பத் துறையின் (டீப் டெக்னாலஜி) அபார வளர்ச்சித் திறனை சிங்கப்பூரர்களுக்கான சிறந்த வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகளாக உருமாற்ற முடியும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்து இருக்கிறார்.

"கொரோனா பரவல் பொருளியல்களிலும் சமுதாயங்களிலும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரப் பராமரிப்பு, தொடர்பு போன்ற துறைகளில் காணப்படும் உடனடி சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் புத்தாக்கத்தை முடுக்கிவிடுவதற்கான உந்துதலை அது அதிகப்படுத்தியுள்ளது. நமது இப்போதைய பொருளியல் சூழலிலும் உயர்தொழில்நுட்பம் வளமான எதிர்காலத்திற்கான வெளிச்சப் புள்ளியாக நீடிக்கிறது," என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உயர்தொழில்நுட்பம் குறிப்பிடுகிறது. பல்வேறு துறைகளில் அவற்றைப் பயன்படுத்தும்போது நீடித்த விளைவுகளை ஏற்படுத்தி, வாழ்க்கையை மாற்றும் திறனை அவை கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கணக்கீட்டியல், 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' ஆகியவை உயர்தொழில்நுட்பத்திற்கான சில எடுத்துக்காட்டுகள்.

அரசாங்கத்தின் புதுத்தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான 'எஸ்ஜிஇன்னவேட்' இன்று ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். உயர்தொழில்நுட்பத் துறை குறித்த கலந்துரையாடல், பயிலரங்குகள், வேலைவாய்ப்புச் சாவடிகள் போன்றவை அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.