தேநீர் குடுவையில் மதுபானம்: விதிகள் மீறிய 23 கடைகள் பிடிபட்டன

கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 23 உணவு, பான விற்பனை நிலையங்கள் சென்ற வார இறுதியில் அரசாங்க அமைப்புகள் மேற்கொண்ட சோதனைகளின்போது பிடிபட்டன.

ஐந்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குழுக்கள் ஒன்றாக அமர்ந்திருந்தது அல்லது வெவ்வேறு மேசைகளுக்கிடையே உறவாடல், இரவு 10.30 மணிக்குப் பிறகும் மதுபானங்களை விற்றது போன்றவை அங்கு இடம்பெற்ற விதிமீறல்கள் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பிரபலமான இடங்களிலுள்ள மொத்தம் 149 உணவு, பான விற்பனை நிலையங்களில் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

விதிமீறல்கள் குறித்து அரசாங்க அமைப்புகள் மறுஆய்வு செய்து வருவதாகவும், “விற்பனை நிலையங்களை தற்காலிகமாக மூடுவது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பொருத்தமான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கூறியது.

“பெரும்பாலான மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கின்றனர். ​​அன்றாட அடிப்படையில் சில விதிமீறல்கள் இன்னும் இடம்பெறகின்றன. அவை பொதுவாக பிரபலமான இரவுநேர விற்பனை இடங்களில் நிகழ்கின்றன” என்று அமைச்சர் கூறினார்.

விதிமீறல்களுக்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, சைனா டவுனில் உள்ள ஓர் உணவு, பான விற்பனை நிலையம் 10 வாடிக்கையாளர்களை முன்பதிவு செய்து அனுமதித்த சம்பவம் ஒன்று. அந்நிறுவனம் பிரித்தியேகமான சாப்பாட்டு அறைக்குள் இரு குழுக்களாக பத்து பேரை அமர வைத்தது. இரு குழுக்களில் இருந்த வாடிக்கையாளர்களை ஒருவருக்கொருவர் தெரியுமா என்று கேட்டபோது, ​​கடையின் ஊழியர் அவர்களுக்குத் தெரியாது என்று கூறினர்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள மற்றோர் உணவு, பான விற்பனை நிலையம் இரவு 11 மணியளவில் 13 வாடிக்கையாளர்களுக்கு உலோக தேநீர் குடுவையில் மதுபானம் பரிமாறியது கண்டறியப்பட்டது. விசாரணையில் தேநீர் குடுவைகளில் மதுபானம் இருந்ததும், குளிர்சாதன பெட்டியின் அடிப்பகுதியில் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து விற்பதும் கண்டறியப்பட்டது.

ஆர்ச்சர்ட் சாலையின் வேறொரு கடையில் நள்ளிரவு நேரத்தில் மது அருந்திய அறுவர் பிடிபட்டனர். அங்கு அதிகாரிகள் சோதனையிட்டபோது, கதவைத் திறப்பதற்கு முன்னர் வாடிக்கையாளர்களும் உரிமையாளரும் மேசையை சுத்தம் செய்து மது பானத்தையும் குவளைகளையும் ஒளித்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மீறும் உணவு, பான விற்பனை நிலையங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இனிமேல் முதல் குற்றத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு பதிலாம அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் வோங் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!