30 மில்லியனை நெருங்கும் தொற்று; ஒரு மில்லியனை தொட்டுவிடும் தூரத்தில் மரண எண்ணிக்கை

18 நாள்களில் மேலும் ஐந்து மில்லியன் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகில் கொவிட்-19 தொற்று பாதிப்பு இன்று 30 மில்லியனைக் கடந்து விடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றால் இதுவரை 29,949,843 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்; 938,424 பேர் மாண்டுவிட்டனர்.

வடஅமெரிக்காவும் தென்னமெரிக்காவும் சேர்ந்து ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவை எதிர்கொண்டுள்ளன. இருப்பினும், இப்போது இந்தியாவில்தான் கொரோனா மையம் கொண்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை எட்டியது.

உலக மக்கள்தொகையில் நான்கு விழுக்காடே இருந்தபோதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் ஏறத்தாழ 20 விழுக்காட்டை அமெரிக்கா கொண்டிருக்கிறது.

ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட இரண்டாவது நாடான இந்தியா, ஒட்டுமொத்த பாதிப்பில் 16 விழுக்காட்டைக் கொண்டுள்ளது. ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 3வது நாடான பிரேசிலின் பங்கு 15%.

கிருமித்தொற்று எண்ணிக்கை 15 மில்லியனில் இருந்து 20 மில்லியனைத் தொட 19 நாட்களும் 20 மில்லியனில் இருந்து 25 மில்லியனை எட்ட 20 நாட்களும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அடுத்த 18 நாட்களிலேயே ஐந்து மில்லியனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது.

இந்நிலையில், உலகில் கிருமித் தொற்று விகிதம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில நாடுகளில் அன்றாட பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பல நாடுகளும் அந்நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், கொரோனா பாதிப்பு, மரணங்கள் குறித்த அதிகாரபூர்வ புள்ளிவிவரம் நிச்சயமாக குறைத்துக் கூறப்பட்டு இருக்கும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து.

குறிப்பாக, கொரோனா பரிசோதனை செய்யும் திறன்களைக் குறைவாகக் கொண்டுள்ள நாடுகளில் உண்மையான பாதிப்பு அளவு வெளிப்பட்டிருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், அந்நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டு பிடித்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்கான போட்டி சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தடுப்பூசியைக் கண்டுபிடித்து, அதை விநியோகிக்கத் தயாராகி விடுவோம் என்று இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்நாட்டின் நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு, தடுப்பு நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி விரிவான அளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் முகக்கவசங்கள் கொரோனா தடுப்பில் செயல்திறன்மிக்கவையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

‘அரசியல் காற்பந்து ஆக்காதீர்!’

ஒரே நாட்டில் இப்படி மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், நாடுகள் ‘ஒரே மாதிரியான’ கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது மிக முக்கியம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் மூத்த நெருக்கடிநிலை நிபுணரான டாக்டர் மைக் ரயன் வலியுறுத்தியுள்ளார்.

“அரசாங்கங்களும் அறிவியல் நிலையங்களும் சான்றுகளை மறுஆய்வு செய்து, விரிவான, எளிதில் புரிந்துகொள்ளும்படியான தகவல்களை மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலமே அவர்கள் பொருத்தமான நடவடிக்கையை எடுக்க முடியும்,’ என்றார் டாக்டர் ரயன்.

மக்களிடம் காணப்படும் குழப்பங்களை, கவலைகளை, அச்சங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், அவற்றைக் கண்டு நகைக்கக்கூடாது என்றும் ஒருவகை அரசியல் காற்பந்துபோல ஆக்கிவிடாதீர் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாளுக்கு நாள் கூடும் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97,894 பேரை அந்நோய் தொற்றியிருப்பது உறுதிசெய்யப் பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்றுக் காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கை கூறியது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு 5.12 மில்லியனை எட்டியது.

மேலும் 1,132 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்க, மரணமடைந்தோர் எண்ணிக்கை 83,198ஆக அதிகரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!