பணிப்பெண் வழக்கு: அமைச்சுநிலை அறிக்கை தாக்கலாகும்

குமாரி பார்த்தி லியானி என்ற முன்­னாள் பணிப்­பெண் வழக்­கு தொடர்­பில் நாடாளுமன்றத்தில் அமைச்­சு­நிலை அறிக்கை ஒன்றைத் தாக்­கல் செய்­யப்­போ­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் புதன் கிழமை தெரி­வித்­தார்.

அந்­தப் பணிப்­பெண் திருட்டு குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் தொடுக்­கப்­பட்ட வழக்­கில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார். உள்­து­றைக் குழு நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்ட அமைச்­சர், இந்த விவ­கா­ரத்தை நாடா­ளு­மன்­றம் விவா­திப்­பது நல்­ல­தாக இருக்­கும் என்று கூறினார்.

நாடா­ளு­மன்­றம் அடுத்த மாதம் கூடு­கிறது. அப்­போது இந்த விவ­கா­ரம் பற்றி விவா­திப்­ப­தற்­காக தாங்­கள் பல கேள்­வி­க­ளை­யும் ஒத்திவைப்­புத் தீர்­மா­னத்­தை­யும் தாக்­கல் செய்து இருப்­ப­தாக பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் உட்­பட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பலரும் தெரி­வித்து உள்­ள­னர்.

இதனை அடுத்து அமைச்­ச­ரின் தக­வல் இடம்­பெற்­றது. குமாரி பார்த்தி லியானி மொத்­தம் $34,000 மதிப்­புள்ள தங்­கள் பொருட்­க­ளைத் திரு­டி­விட்­ட­தாக பிர­பல தொழி­லதி­பரான லியூ மன் லியோங்­கின் குடும்­பம் குற்­றம் சுமத்­தி­யது.

அவர்­கள் புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட குற்­ற­வி­யல் வழக்­கில் தீர்ப்பு பணிப்­பெண்ணுக்­குச் சாத­க­மாக அமைந்­தது.

இதை­ய­டுத்து இந்த விவ­கா­ரம் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெடுத்­தது. வசதி குறைந்த மக்­களை நீதித் துறை சரி­ச­ம­மாக நடத்­த­வில்­லையோ என்று சிலர் கேள்வி எழுப்­பி­னர்.

இந்­நி­லை­யில், இந்த விவ­கா­ரம் பற்றி எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளித்த அமைச்­சர் சண்­மு­கம், என்ன நடந்­தது என்­பதை எல்­லாம் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­து­விட்டு கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிப்­பது நல்­ல­தாக இருக்­கும் என்­றார்.

அமைச்­சர் கருத்து கூறி­ய­தற்கு முன்­ன­தாக எதிர்க்­கட்­சி­யான பாட்­டா­ளிக்­ கட்சி புதன்­கி­ழமை அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

குற்­ற­வி­யல் நீதி முறை­யில் சமத்து­வப் பிரச்சினை பற்றி பேசு­வதற்­காக அல்­ஜுனிட் குழுத் தொகுதி உறுப்­பி­னர் திரு­வாட்டி சில்­வியா லிம், ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் ஒன்­றைத் தாக்­கல் செய்து இருப்­ப­தாக அது தெரி­வித்­தது.

ஜாலான் புசார் குழுத் தொகுதி உறுப்­பி­னர் டெனிஸ் புவா­வும் உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள் தொடர்­பாக ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் ஒன்­றைத் தாக்­கல் செய்து இருக்­கி­றார் என்­ப­தால் அடுத்­த கூட்­டத்­தில் யாருக்­குப் பேச வாய்ப்பு கிடைக்­கும் என்­பது சீட்­டுக் குலுக்கு மூலம் முடி­வா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!