வெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்

அசுத்தமான அறைகள், சேதமுற்ற கழிவறை

அறை­கள் அருவருக்கத்தக்க நிலையில் வைத்­தி­ருந்த குற்றத்திற்காக வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களை நடத்­தும் நிறு­வ­னத்­துக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் $118,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. லேபர்­டெல் மேனேஜ்­மண்ட் கார்ப்­ப­ரே­ஷன் என்­னும் அந்த நிறு­வ­னம் நடத்­தும் விடு­தி­களில் நான்கை அதி­கா­ரி­கள் சோதித்­த­போது அவற்­றின் நிலை மோசமாக இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது.

2018, 2019ஆம் ஆண்­டு­களில் சோதனை நடை­பெற்­ற­போது இரு வசிப்­பி­டங்­களில் பிரச்­சி­னை­கள் இருந்­த­தும் தெரிய வந்­தது. சேத­ம­டைந்த விளக்­கு­கள், பழு­த­டைந்த பாது­காப்­புப் பெட்­டி­கள், சேத­ம­டைந்த கழி­வ­றைக் கோப்பை ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் கண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் பொறுப்­பில் இருந்த பர்­விஸ் அகம்­மது முகம்­மது கெள­வுஸ், 43, என்­ப­வ­ருக்கு நேற்று $59,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. இந்த அப­ரா­தத் தொகை­யைச் செலுத்­தத் தவ­றி­னால் 195 நாட்­கள் சிறைத் தண்­ட­னையை அவர் அனு­ப­விக்க வேண்­டி­ய­தி­ருக்­கும் என நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. நிறு­வன அதி­கா­ரி­க­ளுள் ஒரு­வ­ரான ஷேக் முகம்­மது முகம்­மது அப்­துல் ஜலீல், 34, என்­ப­வ­ருக்கு $22,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அப­ரா­தம் கட்­டத் தவ­றி­னால் அவ­ருக்கு 73 நாட்­கள் சிறைத் தண்­டனை கிடைக்­கும்.

சொத்து மற்­றும் தள­வாட நிறு­வ­ன­மான எம்­இ­எஸ் குழு­மத்­தின் ஓர் அங்­கம்­தான் இந்த லேபர்­டெல் மேனேஜ்­மண்ட் கார்ப்­ப­ரே­ஷன். அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட இரு சிங்­கப்­பூ­ரர்­களும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­திச் சட்­டத்­தின் கீழ் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை கடந்த மார்ச் மாதம் ஒப்­புக்­கொண்­ட­னர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் நடப்­புக்கு வந்த இச்­சட்­டத்­தின்­கீழ் தண்­டிக்­கப்­படும் முத­லா­ம­வர்­கள் இவர்­கள்.

ஜூரோங் பெஞ்­சுரு தங்­கும்­வி­டுதி 1ல் 2018 மே மாதம் சோதனை நடத்­தப்­பட்­ட­போது அங்­கி­ருந்த 27 அறை­கள் அரு­வ­ருத்­தக்க நிலை­யில் காணப்­பட்­டன. பிசு­பி­சுப்­பான சமை­யல் அறை­களும் அதில் அடங்­கும். இதே­போன்ற பிரச்­சி­னை­கள் 2018 ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யி­லும் கடந்த ஆண்­டி­லும் சோதனை யிடப்­பட்ட இதர மூன்று தங்­கும் விடு­தி­க­ளி­லும் காணப்­பட்­டன.

கியன் டெக் லேனி­லுள்ள புளூ ஸ்டார்ஸ் தங்­கும் விடுதி, காக்கி புக்­கிட் ரோடு 3ல் உள்ள த லியோ தங்­கும் விடுதி ஆகி­ய­வற்­றி­லும் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டன.

பர்­விஸ், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடுதி சட்­டத்­தின் கீழ் நான்கு குற்­றச்­சாட்­டு­களில் குற்­ற­வாளி என்று நீதி­மன்­றம் அறி­வித்­தது. ஜூரோங் பெஞ்­சுரு தங்­கும் விடு­தி­கள் 1, 2 ஆகி­ய­வற்­றை­யும் புளூ ஸ்டார்ஸ் தங்­கும் விடு­தி­யை­யும் அன்­றா­டம் சென்று மேற்­பார்­வை­யி­டும் பொறுப்­பில் அப்­போது அவர் இருந்­தார்.

இதர மூன்று தங்­கும் விடு­தி­க­ளின் மனி­த­வ­ளம், பாது­காப்பு, துப்­பு­ரவு, பரா­ம­ரிப்பு மற்­றம் சாத­னங்­கள் கொள்­மு­தல் ஆகி­ய­வற்­றுக்­கும் அவர் பொறுப்பு வகித்து வந்­தார்.

அதே­போல லேபர்­டெல் நிறு­வ­னத்­துக்­கும் ஜூரோங் பெஞ்­சுரு விடுதி 1ல் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் முத­லா­ளி­க­ளுக்­கும் இடை­யி­லான வாடகை ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டும் பொறுப்­பில் ஷேக் இருந்­தார். விடு­தி­யில் தங்க அனு­ம­திக்­கப்­பட்ட எண்­ணிக்கை தொடர்­பில் உரிம நிபந்­த­னை­களை மீறி­ய­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

2018 மார்ச் 31ல் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­போது விடு­தி­யின் இரு பகு­தி­களில் அனு­ம­திக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் அதி­க­மா­னோர் இருந்­த­தைக் கண்­ட­னர். 252 பேருக்கு அனு­ம­திக்­கப்­பட்ட இடத்­தில் 268 பேர் இருந்­தது அப்போது தெரிய வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!