சுடச் சுடச் செய்திகள்

தாய்லாந்து மன்னருக்கு சவால் விடுக்கும் ‘மக்கள் கேடயம்’

தாய்லாந்து அரசாங்கத்துக்கும் மன்னருக்கும் எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள அரண்மனைக்கு அருகில் உள்ள சனாம் லுவாங் எனும் திடலில் அந்நாட்டு மன்னருக்குச் சவால் விடுக்கும் வகையில் கேடயம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்துள்ளனர்.

இந்தக் கேடயத்துக்கு மக்களின் கேடயம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

1930களில் அப்போதைய மன்னராட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட கேடயத்துக்குப் பதிலாக இந்தக் கேடயம் வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தோர் கூறினர். பழைய கேடயம் 2017ல் காணாமல் போனது. தாய்லாந்தின் மன்னருக்கு இருக்கும் அதிகாரங்கள் தொடர்பாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அரசியல் முறையில் மாற்றம் வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

கடந்த வாரயிறுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது ஆயிரிக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பிரதமர் பிராயுட் சான் ஓ சா பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon