எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் சீனா

பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவில் அணுவாயுத ஆற்றல் கொண்டுள்ள எச்-6 பாம்பர் விமானங்கள் தாக்குவதை பாவனையாகக் காட்டும் காணொளி ஒன்றை சீனாவின் அணுவாயுதப் படை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகையில் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இச்செயல் இருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சீன ஆகாயப்படையின் அதிகாரபூர்வ வெய்போ சமூக ஊடகப் பக்கத்தில் இந்தக் காணொளி கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதே நாளில் தைவானுக்கு அருகே சீனா ராணுவப் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தைவானுக்கு அமெரிக்காவின் அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் வந்து சென்றது குறித்து தனது காட்டத்தை சீனா இவ்வாறு வெளிப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

குவாம் அமெரிக்காவின் முக்கியமான ராணுவத் தளங்களில் ஒன்று. குறிப்பாக ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நிகழும் பிரச்சினைகளுக்காக அமெரிக்கா குவாம் தீவிலுள்ள தனது படைகளை அனுப்பும். சீனா வெளியிட்ட இந்த 2 நிமிட 15 வினாடி காணொளி, விறுவிறுப்பான இசையுடன் ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டம் போல உள்ளது.

இது குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வெளிவரவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!