சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19 ஆதரவு மானியம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு

கொவிட்-19 நெருக்­கடி கார­ண­மாக வேலை­ இ­ழந்த அல்­லது குறிப்பிடத்தக்க அளவு வரு­மா­னம் இழந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் அறி­விக்­கப்­பட்ட மானி­யம் இவ்­வாண்டு இறுதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே நேரத்­தில், அதற்­கான தகுதி நிபந்­த­னை­களும் திருத்­தி­ அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த மாதத்­தில் இருந்து, கொவிட்-19 ஆத­ரவு மானி­யம் கோரி விண்­ணப்­பிப்­போர் ஒரு வீட்­டிற்கு மேல் வைத்­தி­ருக்­கக்­கூடாது. வரு­மா­னம் ஈட்ட குறைந்த வழி­வ­கையே உள்­ளோ­ருக்கு ஆத­ரவு கிட்­டு­வதை உறு­தி­செய்­யும் நோக்­கில் இந்­த மாற்­றம் இடம்­பெறு­வ­தா­கச் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அத்­து­டன், ஆத­ரவு மானி­யம் கோரி விண்­ணப்­பிக்­கும் வேலை­ இல்­லாத அனை­வ­ரும் தங்­க­ளது வேலை தேடல் அல்­லது பயிற்சி தொடர்­பான முயற்­சி­களை மெய்ப்­பிக்க வேண்­டும் என்­றும் அமைச்சு தனது அறிக்­கை­யில் கூறி­யி­ருக்­கிறது.

கொரோனா பர­வல் பொரு­ளி­ய­லில் ஏற்­படுத்­திய தாக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் வேலை தொடர்­பான திறன்­க­ளை­யும் தேர்ச்­சி­க­ளை­யும் பெற­வும் வேலை கிடைப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை விரி­வு­ப­டுத்­திக் கொள்­ள­வும் அர­சாங்­கத்­தின் ‘எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத் திட்­டம்’ உத­வு­வ­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

“அம்­மு­யற்­சி­க­ளுக்கு இணங்க, முதல் முறை­யாக அல்­லது இரண்­டாம் முறை­யாக ஆத­ரவு மானி­யம் கோரி விண்­ணப்­பிக்­கும் வேலை இல்­லா­த­வர்­கள், மானி­யத்­திற்­குத் தகு­தி­பெ­று­வ­தற்கு வேலை தேடிக்­கொள்ள அல்­லது பயிற்­சிக்­கா­கத் தாங்­கள் முயற்சி எடுத்து வரு­வதை நிரூ­பிக்க வேண்­டும்,” என்று அமைச்சு தெரி­வித்­து இருக்கிறது.

வேலை­யி­ழந்த, தன்­வி­ருப்­ப­ம் இன்றி ஊதி­ய­மில்லா விடுப்­பில் அனுப்­பப்­பட்­டுள்ள, நீடித்த காலத்­திற்கு குறிப்­பி­டத்­தக்க அளவு வரு­மா­னத்தை இழந்­துள்ள முழு­நேர அல்­லது பகு­தி­நேர சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வாசத் தகுதிகொண்ட ஊழி­யர்­க­ளுக்கும் கொவிட்-19 ஆத­ரவு மானி­ய­மாக அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு மாதந்­தோ­றும் $800 வரை வழங்­கப்­படும்.

இவ்­வாண்டு மே மாதம் தொடங்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் இம்­மா­தத்­து­டன் முடி­வ­டை­வ­தாக இருந்­தது.

ஆனால், இந்த ஆத­ரவு மானி­யம் இவ்­வாண்டு டிசம்­பர் இறுதி வரைக்­கும் நீட்­டிக்­கப்­படும் என துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கடந்த மாதம் அறி­வித்­தார்.

அது­வரை, 60,000க்கு மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு $90 மில்­லி­ய­னுக்கு மேல் கொவிட்-19 ஆத­ரவு மானி­ய­மாக வழங்­கப்­பட்டிருந்­தது.

இந்நிலையில், “இப்­போ­தைய தகுதி நிபந்­த­னை­க­ளைப் பூர்த்தி செய்­யும் முதல்முறை விண்­ணப்­ப­தா­ரர்­கள் ஆத­ரவு மானி­யம் கோரி இம்­மா­தம் 30ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்­ணப்­பிக்­க­லாம். திருத்­தப்­பட்ட தகுதி நிபந்­த­னை­கள் அக்­டோ­பர் 1ஆம் தேதி காலை 9 மணி­யி­லி­ருந்து நடப்­பிற்கு வரும்,” என்று அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டு உள்­ளது.

ஏற்­கெ­னவே கொவிட்-19 ஆத­ரவு மானி­யத்தை முழு­மை­யா­கப் பெற்­ற­வர்­கள் அல்­லது அதைப் பெறு­வது இது­தான் கடைசி மாதம் எனில், அவர்­கள் மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு அதை நீட்­டிக்­கக் கோரி அக்­டோ­பர் 1ஆம் தேதி­யில் இருந்து விண்­ணப்­பிக்­க­லாம்.

ஆத­ரவு மானி­யம் வேண்­டு­வோர் https://msf-csg.gov.sg/preinstruction/csg என்ற இணை­யப்­பக்­கம் வழி­யாக விண்­ணப்­பிக்­க­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon