சிங்கப்பூரில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: அதிக ஊழியர்கள் வேலையிடம் திரும்பலாம்

சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகளில் சில தளர்த்தப்படவிருக்கின்றன.

அத்துடன் கூடுதல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படவும் உள்ளன என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை விட சற்று அதிகமான ஊழியர்கள் வேலையிடங்களுக்கு இனி செல்லலாம்.

ஆனால் கிருமித்தொற்று தொடர்பிலான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் செயல்பாட்டில் இருக்கவேண்டும்.

மேலும் நீக்குப்போக்கான வேலை நேரங்கள், வெவ்வேறு நேரங்களில் ஊழியர்கள் பணிக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளை முதலாளிகள் செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஊழியர்கள் தங்களின் வேலை நேரத்தில் குறைந்தது பாதி நேரமாவது வீட்டிலிருந்து பணிபுரிவதை முதலாளிகள் உறுதிசெய்யவேண்டும்.

மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வேலையிடத்தில் இருக்கக்கூடாது என்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

இத்துடன் கிருமி முறியடிப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழு ஒரு புதிய சோதனைத் திட்டம் குறித்தும் அறிவித்தது.

இத்திட்டத்தின்கீழ் வட்டார அல்லது அனைத்துலக அளவில் விரிவான பொறுப்புகளை வகிக்கும் மூத்த நிர்வாகிகள், அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

இச்சோதனைத் திட்டத்தின்படி சிங்கப்பூரின் பொருளியல் முகவைகளின் மூலம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும்.

இதில் பயணம் செய்வோர் ஒரு குறிப்பிட்ட பயணத் திட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு பயணம் செய்தவர்கள் நாடு திரும்பும்போது வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவிற்குப் பதிலாக கொவிட்-19 சோதனையை மேற்கொண்டு முடிவுகள் வரும்வரை சுயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

வேலையிடங்களில் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகள், வர்த்தக ஒன்றுகூடல்கள், ஆண்டு பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கப்படும்.

ஆனால் அவை நடந்தேற பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் செயல்பாட்டில் இருக்கவேண்டும்.

அத்துடன் வேறு வெளிப்புற இடங்களில் வேலை தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்க தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு வேலையிடங்களில் கொவிட்-19 தொடர்பிலான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் பற்றிய விதிமுறைகளில் மனிதவள அமைச்சு மாற்றம் செய்துள்ளது.

இந்த மாற்றங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) முதல் நடப்புக்கு வரும்.

கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்க கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் வேலையிடங்களில் தடைகளைத் தளர்த்த, எடுக்கப்படும் விரிவான திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமய நிகழ்வுகளுக்கான சேவைகள், பதிவுத் திருமணங்கள், திருமண விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தொடர்பில் தளர்த்தப்படவுள்ள பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் குறித்தும் திரு கான் அறிவித்தார்.

டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான கொரோனா கிருமிச் சோதனை தொடங்கியது தொடர்பிலும் திரு கான் பேசினார்.

ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள் மட்டுமே முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாகும் என்றும் கூறப்பட்டது.

பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

சிங்கப்பூரின் பொருளியல் துறைகளை இறுதியானதும் மூன்றாவதுமான கட்டத்தில் திறப்பதை நோக்கி அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாக திரு வோங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!