'ரோபோக்களால் வேலைகள் பறிபோகுமோ என அஞ்ச வேண்டாம்; மனித ஆற்றலில் முழுக் கவனம் செலுத்தவும்'

மனி­தர்­கள் செய்­யும் வேலை­களை இயந்­திர மனி­தர்­கள் செய்­து­ வி­டு­வ­தால், மனி­தர் ­க­ளின் வேலை­கள் பறிக்­கப்­ப­டுமா அல்­லது கணி­னி­களை மனி­த­ரால் முறி­ய­டிக்க முடி­யுமா போன்ற கவ­லை­கள் மக்­க­ளுக்­குத் தேவை­யில்லை.

மாறாக, மனித ஆற்­ற­லில் மக்­கள் முழுக் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

“உதா­ரணத்­துக்கு, இயந்­திர மனி­தர்­களும் கணி­னி­களும் ஆக்­க­பூர்­வ­மாக யோசிக்க முடி­யாது, நேருக்கு நேரான கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்க முடி­யாது, ஒரு­வ­ரி­டம் எந்த ஒரு விவ­கா­ரத்­திலோ சவால் விடுக்க முடி­யாது, எந்த ஒரு பிரச்­சி­னைக்கும் ஒரு குழு­வாக தீர்வு காண முடி­யாது.

“தன்­னிச்­சை­யான, சமூக கற்­ற­லை­யும் எந்­த­வோர் இயந்­தி­ரத்­தா­லும் மேற்­கொள்ள முடி­யாது,” என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான எதிர்­கால வேலை­களும் ஆற்­றல்­களும் எனும் தலைப்­பில் நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்று திரு வோங் பேசி­னார்.

திரு வோங்­கு­டன், தென்­மேற்கு வட்­டார மேயர் திரு­வாட்டி லோ யென் லிங், மத்­திய சிங்­கப்­பூர் வட்­டார மேயர் திரு­வாட்டி டெனிஸ் புவா, வட­கி­ழக்கு வட்­டார மேயர் திரு டெஸ்­மண்ட் சூ, வட­மேற்கு வட்­டார மேயர் திரு அலெக்ஸ் யாம், தென்­கி­ழக்கு வட்­டார மேயர் திரு ஃபாமி அலி­மான் ஆகிய ஐந்து மேயர்­களும் உரை­யா­ட­லில் கலந்து கொண்­ட­னர்.

“நேற்­றைய தினத்­தை­விட இன்­றைய காரி­யங்­களை எவ்­வாறு சிறப்­பாக செய்­ய­லாம் என்று மக்­கள் சிந்­திக்க தொடங்கி விட்­டார்­கள். இன்­னும் அதிக அள­வில் நிர­லிடு­த­லைக் கற்க வேண்­டுமா, தக­வல் தொழில்­நுட்­பத்­தில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்­டும் என்று மக்­கள் சிந்­திக்­கி­றார்­கள்.

“இவை எல்­லாம் முக்­கி­ய­மான ஆற்­றல்­கள் என்று நான் கரு­து­கி­றேன். தொழில்­நுட்­பம் பற்றி நாம் நன்கு புரிந்­து­கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் இயந்­தி­ரங்­களை நாம் சிறப்­பா­கக் கையாள முடி­யும்.

“அதே­வே­ளை­யில் கணி­னி­யைத் தோற்­க­டிக்­கும் இன்­னொரு கணி­னி­யாக நாம் மாற, இன்­னும் அதி­க­மாக கற்க வேண்­டும் என்று சிந்­திக்க தேவை­யில்லை.

“இதற்கு ஒரு வழி நமது மனித வலி­மையை இரட்­டிப்­பாக்­கிக்­கொள்ள வேண்­டும். மனி­த­னின் ஆற்­றல்­கள் இயற்­கை­யா­னவை, உள்­ளார்ந்­தவை என்­றும் அனை­வ­ரா­லும் இதை செய்ய முடி­யும் என்­றும் மெத்­த­ன­மாக இருந்­து­வி­டக் கூடாது. அதில் இன்­னும் அதிக பயிற்சி எடுத்­துக்­கொண்டு அதில் மேன்­மை­ய­டைய வேண்­டும்,” என்­றும் அமைச்­சர் வோங் வலி­யு­றுத்­தி­னார்.

பின்­னர் பேசிய திரு­வாட்டி டெனிஸ் புவா, “எதிர்­கா­லத்­துக்கு நமக்­குத் தேவைப்­படும் எல்லா ஆற்­றல்­களும் தொழில்­நு­ட்­பம் சார்ந்­த­வை­யாக இருக்க வேண்­டும் என்­ப­தில்லை. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு போன்ற மற்ற வேலை­களும் உண்டு. அதன் மூலம், தொழில்­நுட்­பத்­தைத் தொடர்­புக் கரு­வி­யா­கப் பயன்­படுத்தி நோயா­ளி­க­ளைக் கவ­னித்­துக்­கொள்ள முடி­யும்,” என்­றார்.

அடுத்து பேசிய திரு டெஸ்­மண்ட் சூ, “மாற்­றங்­கள் விரை­வில் நிகழ்­கின்­றன. அதன் அடிப்­ப­டை­யில் தங்­களை மாற்­றிக்­கொண்டு முன்­னேற மக்­கள் தயா­ராக இருக்­கின்­ற­னர் என்­ப­து­தான் இங்கு மகிழ்ச்­சி­யான செய்தி,” என்­றார்.

மூன்று அமைப்­பு­கள் சேர்ந்து ஓர் உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்ட சடங்­குக்­குப் பிறகு இந்­தக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

சமூக மேம்­பாட்டு மன்­றங்­களில் சார்­பில் மேயர்­கள் குழு­வின் தலை­வர் திரு­வாட்டி லோ, ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பின் தலைமை நிர்­வாகி திரு ஓங் சீ சின், வேலை வாய்ப்பு, வேலை நிய­ம­னக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி திரு கில்­பர்ட் டான் ஆகி­யோர் உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

இந்த மூன்று ஆண்டு உடன்­பாடு 2023 ஆகஸ்ட் மாதம் வரை, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் திட்­டங்­கள் பற்றி தக­வல் அளிப்­ப­து­டன் தங்­கள் வாழ்க்­கைத் தொழில் திட்­ட­மி­ட­லுக்­குத் தேவைப்­படும் வளங்­க­ள் பற்­றி­யும் வழி­காட்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!