பேருந்து ஓட்டுநர், நடத்துநரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஓடும் பேருந்­தில் வைத்து பெண் பயணி ஒரு­வரை அந்தப் ­பே­ருந்­தின் ஓட்­டு­ந­ரும் நடத்­து­ ந­ரும் இரவு முழு­வ­தும் கூட்­டா­கப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்த அதிர்ச்சி சம்­ப­வம் இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், மீரட் நக­ரில் நிகழ்ந்­து இருக்கிறது.

துணை மருத்­துவ மாணவி ஒரு­வர் கூட்டு வன்­பு­ணர்­வுக்குள்­ளாகி, பேருந்­தில் இருந்து தூக்கி எறி­யப்­பட்ட ‘நிர்­பயா’ சம்­ப­வத்தை இது நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. அண்­மைய கொடூ­ரம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு நிகழ்ந்­தது. மறு­நாள் காலை­யில் மீரட் நக­ரி­ல் உள்ள டெல்லி சாலை­யில் சுய­நினை­வின்றிக் காணப்பட்ட அவர் மருத்­து­வ­ம­னையில் அனுமதிக்கப் பட்டார். சுய­நி­னை­வு திரும்பிய பிறகு அவர் தமக்கு நேர்ந்த கொடு­மையை விவ­ரித்­தார்.

அங்­குள்ள பைஷாலி பேருந்து நிலை­யத்­திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஒரு பேருந்­தில் அப்­பெண் ஏறி­னார். பய­ணத்­தின்­போது அவ­ருக்கு மயக்க மருந்து கலந்த மென்­பா­னம் கொடுக்­கப்­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. சிறிது நேரத்­தில் மயக்­க­ம­டைந்த அவரை அப்­பே­ருந்­தின் ஓட்­டு­ந­ரும் நடத்­து­நரும் இரவு முழு­வ­தும் மாறி மாறி வன்­பு­ணர்வு செய்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

பெண்­ணின் வாக்­கு­மூ­லத்­தைப் பதி­வு­செய்த போலி­சார், பின் அவரை மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­த­னர். சம்­ப­வத்தை உறு­தி­செய்த மீரட் காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர், சிசி­டிவி கரு­வி­யில் பதி­வான காணொ­ளி­யைக் கொண்டு குற்­ற­வா­ளி­க­ளைத் தேடி வரு­வ­தா­கச் சொன்­னார்.

கடந்த ஒரு மாதத்­தில் மட்­டும் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் இப்­படி ஓடும் வாக­னத்­தில் வைத்து பெண்­ணைக் கூட்டு வன்­பு­ணர்வு செய்த மூன்று சம்­ப­வங்­கள் பதி­வாகி­யுள்­ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!