போதைப்பொருள் விவகாரம்: நடிகைகளின் கைபேசிகள் பறிமுதல்

நடி­கை­கள் தீபிகா படு­கோன், சாரா அலி­கான், ஷ்ரத்தா கபூர் ஆகி­யோ­ரின் கைபே­சி­களை இந்­திய போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி இருக்­கிறது. இந்­தித் திரை­யு­ல­கில் போதைப்­பொ­ருள்­கள் தாரா­ள­மா­கப் புழங்கி வரு­வ­தா­கச் சொல்­லப்­படு­வதை அடுத்து நேற்று முன்­தி­னம் அந்த நடி­கை­க­ளி­டம் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் பல மணி நேரம் விசா­ரணை நடத்­தி­னர்.

இத­னி­டையே, நேற்று முன்­தி­னம் ஷ்ரத்­தா­கபூரிடம் ஆறு மணி நேர­மும் சாரா­ அலி கானிடம் நான்­கரை மணி நேர­மும் விசா­ரணை இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

விசா­ர­ணை­யின்­போது நடிகை தீபிகா படுகோன், தம்­மு­டைய மேலா­ளர் கரிஷ்மா பிர­கா­ஷு­டன் முரண்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

“கரிஷ்மா பிர­காஷ், சாரா, தீபிகா, ஷ்ரத்தா ஆகி­யோ­ரின் வாக்­கு­மூ­லங்­கள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன. விசா­ர­ணைக்­குப் பிறகு கிஷிட்­டிஜ் பிர­சாத் கைது செய்­யப்­பட்­டார். புதி­தாக எந்த அழைப்­பா­ணை­யும் விடுக்­கப்­ப­ட­வில்லை. 18 பேருக்கு மேல் கைது செய்­தி­ருக்­கி­றோம்,” என்று போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு துணைத் தலைமை இயக்­கு­நர் முத்தா அசோக் ஜெயின் தெரி­வித்­தார்.

நடி­கர் சுஷாந்த் சிங் ராஜ்­புத்­தின் மர­ணத்­திற்­குப் பணம் கார­ணமா என அம­லாக்­கத்­துறை விசா­ரித்து வந்­தது. அத்­துறை அளித்த அதி­கா­ர­பூர்வ தக­வலை அடுத்து, போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது.

விசா­ர­ணை­யில், போதைப் பயன்­பாடு, கொள்­மு­தல், பயன்­பாடு, அதைக் கொண்டு வரு­வது தொடர்­பான உரை­யா­டல்­கள் உட்­பட பல தக­வல்­கள் வெளி­யாகி இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. மும்முறை அழுத தீபிகா கோவாவில் படப்பிடிப்பில் இருந்த தீபிகா படுகோன், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைக்காக தம் கணவரும் நடிகருமான ரன்பீர் சிங்குடன் மும்பை சென்றார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் தீபிகா ஒரு ‘வாட்ஸ்அப்’ குழுவைத் தொடங்கியதாகவும் அதில் போதைப் பொருள் தொடர்பில் விவாதிக்கப் பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. விசாரணையின்போது தீபிகா மூன்று முறை அழுததாகவும் அப்போது கண்ணீர் விடுவதெல்லாம் எடுபடாது என்று அதிகாரிகள் சொன்னதாகவும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘வாட்ஸ்அப்’ உரையாடல்களை அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஆயினும் தான் போதைப்பொருள் உட்கொண்டதில்லை, மற்றவர்களுக்கு விநியோகித்ததும் இல்லை என்று அவர் மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகே தீபிகாவை அதிகாரிகள் விடுவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!