சிங்கப்பூர்: மேம்பட்ட மருத்துவக் காப்புறுதி திட்டம்

சிங்கப்பூரர்கள் அதிக பலன் அடையும் வகையில் மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்தில் பெரும் மாற்றங்களை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து நடப்புக்கு வரும் இந்த மாற்றங்கள், பெரிய அளவிலான மருத்துவ மனைக் கட்டணங்களைச் சமாளிக்க பேருதவியாக இருக்கும்

மேலும் காப்புறுதித் தொகைக்கான கோரிக்கை வரம்பும் 100,000 வெள்ளியிலிருந்து 150,000 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.

ஆனால் அதே சமயத்தில் காப்புறுதிச் சந்தாவையும் அடுத்த ஆண்டிலிருந்து 35 விழுக்காடு வரை அதிகமாக செலுத்த வேண்டி யிருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘மெடிஷீல்ட் லைஃப்’ கட்டாயக் காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு இப்போதுதான் முதல் முறையாக காப்புறுதி சந்தா கட்டணம் உயர்த்தப்படுகிறது.

உத்தேச சந்தா உயர்வு காரணமாக ஆண்டுக்கு 500 வெள்ளி கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஆனால் சிங்கப்பூரர்கள் தற்போது சிரமமான காலக்கட்டதை எதிர்நோக்குவதால் கொவிட்-19 கழிவு மூலம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சந்தா உயர்வு சுமையைக் குறைக்க வழி வகை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

முதல் ஆண்டில் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சந்தா உயர்வில் 70 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும். அடுத்த ஆண்டு இந்தச் சலுகை 30 விழுக்காட்டுக்குக் குறையும்.

இதற்காக அரசாங்கம் 360 மில்லியன் வெள்ளியைச் செலவிடும் என்று அமைச்சர் கான் மேலும் கூறினார்.

குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்கெனவே சந்தா தொகையில் 15 முதல் 50 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படுகிறது. முன்னோடித் தலைமுறையினர் 40 முதல் 60 விழுக்காடு கழிவு பெற்று வருகின்றனர். மெர்டேக்கா தலை முறையினருக்கு 5 முதல் பத்து விழுக்காடு வரை கூடுதலாக கழிவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சந்தா கட்டணத்தில் புதிய கழிவு கூடுதலாக வழங்கப்படவிருக்கிறது.

இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கம் 2.2 பில்லியன் வெள்ளியை செல விடும்.

உத்தேச சந்தா கட்டண உயர்வால் சிங்கப்பூரர்கள் இன்னும் அதிக அளவில் மருத்துவக் கட்டணங்களை சமாளிக்க முடியும்.

மாரடைப்பு, கதிரியக்க ெவளிநோயாளி சிகிச்சை போன்ற கடுமையான மருத்துவப் பராமரிப்புக்கு அதிக அளவில் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். சமூக மருத்துவமனையில் மறுவாழ்வு பராமரிப்புக்குத் தேவையான அன்றாட காப்பீட்டுத் தொகை வரம்பு போதுமான அளவில் உள்ளது. கடுமையான மருத்துவப் பராமரிப்புக்குத் தேவையான அளவில் இல்லை. ஆனால் செலவு சுமார் 20 விழுக்காடு கூடுதலாக இருக்கிறது. தற்போதைய உத்தேச திட்டத்தின் மூலம் இதற்கான வரம்பு நாளுக்கு 430 வெள்ளிக்கு உயர்த்தப்படுகிறது.

தீவிரக் கண்காணிப்பு போன்ற மருத்துவக் கட்டணங்களுக்கான காப்பீட்டுத் தொகை கோரிக்கை வரம்பும் நாளுக்கு 1,200 வெள்ளி யிலிருந்து 2,200 வெள்ளிக்கு அதிகரிக்கப்படுகிறது. ரத்த சுத்தி கரிப்பு, மனநல சிகிச்சை போன்ற மருத்துவ பராமரிப்புக்கும் இது பொருந்தும்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் இரண்டு நாட்களுக்கு அன்றாட சிகிச்சை அறைக் கட்டணம் கூடுதலாக நாளுக்கு 200 வெள்ளி கிடைக்க உத்தேச திட்டம் உதவும்.

தற்கொலை முயற்சிக்கான சிகிச்சை, சுயமாக காயம் விளைவித்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றுக்கும் மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதியைப் பயன்படுத்த முடியும்.

இதற்கிடையே பத்தில் ஒன்பது மருத்துவக் கட்டணங்களை ஈடுகட்டும் வகையில் ‘மெடிஷீல்ட் லைஃப்’ காப்புறுதி கோரிக்கை தொகை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெடிஷீல்ட் லைஃப் மன்றம் நேற்று தெரிவித்தது.

உத்தேச மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் மெடிஷீல்ட் லைஃபில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்தறிய அக்டோபர் 20ஆம் தேதி ஆலோசனைக் கூட்டங்களை மன்றம் நடத்து கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!