வீட்டு மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் உயரும்

சிங்கப்பூரில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு, முன்னைய காலாண்டுகளுடன் ஒப்பிட கிலோ வாட்டுக்கு சராசரியாக 1.83 காசு உயரும். வீடுகளுக்கான எரிவாயு கட்டணமும் கிலோவாட் ஒன்றுக்கு 0.83 காசு அதிகரிக்கும்.

நாளை (அக்டோபர் 1) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இக்கட்டண உயர்வு நடப்பில் இருக்கும்.

எரிசக்தி செலவினங்களின் அதிகரிப்பு ​மின்சாரக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம் இன்று தெரிவித்தது.

மின்சார கட்டணத்தின் முக்கிய அங்கமாக செலவினம் உள்ளது. இது மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என அது குறிப்பிட்டது.

எரிபொருள் விலை உயர்வு எரிவாயுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று ‘சிட்டி கேஸ்’ வெளியிட்ட தனி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் அதிகரித்தபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது மிகக் குறைந்த கட்டணம் என்று எஸ்பி குழுமம் குறிப்பிட்டது.

கட்டமைப்புச் செலவுகள், சந்தை ஆதரவு சேவைகள் போன்ற மின்சார கட்டணத்தின் பிற கூறுகளில் மாற்றமில்லை.

புதிய கட்டணத்தின்படி வீடுகளுக்கான மின்சாரம் கட்டணம் 7% பொருள் சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) சேர்க்கப்படாமல், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு கிலோவாட் ஒன்றுக்கு 19.6 காசுகளிலிருந்து 21.43 காசுகளாக உயரும், அல்லது ஏறக்குறைய 9% அதிகரிக்கும்.

நான்கு அறை வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் மாதாந்தர மின்சாரக் கட்டணம் சராசரியாக $7.01 ஏற்றம் காணும் என SP குழுமம் தெரிவித்துள்ளது.

நான்கு அறைகள் கொண்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான சராசரி மாத மின் கட்டணம் $7.01 (ஜிஎஸ்டிக்கு முன்) அதிகரிக்கும்.

எரிவாயு கட்டணம், இந்த மூன்று மாதங்களில் ஒரு கிலோவாட்டுக்கு 16.36 காசுகளிலிருந்து 17.19 காசுகளாக உயரும் (ஜிஎஸ்டிக்கு முன்) அல்லது சுமார் 5% அதிகரிக்கும்.

எஸ்பி குழு, சிட்டி கேஸ் ஆகிய இரண்டும் எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் காலாண்டு காலகட்டத்தில் மின்சாரம், எரிவாயு கட்டணங்களை மறுஆய்வு செய்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!