இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 87 பெண்களுக்குப் பாலியல் கொடுமை

கடந்த ஆண்­டில் நாள் ஒன்றுக்­குச் சரா­ச­ரி­யாக 87 பெண்­கள் பாலி­யல் வன்­ பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­னர். சென்ற 2019ஆம் ஆண்­டில் மொத்­தம் 405,861 பெண்­க­ளுக்கு எதி­ராகக் குற்­றங்­கள் பதி­வா­கி­ன. முந்­தைய 2018ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இது 7.3% அதி­கம். இந்­தி­யா­வின் தேசிய குற்­றப் பதி­வ­கம் வெளி­யிட்ட ‘இந்­தி­யா­வில் குற்­றங்­கள்-2019’ எனும் அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. கடந்த ஆண்­டில் மட்­டும் 32,033 பெண்­கள் பாலி­யல் கொடு­மைக்கு ஆளா­கி­னர். இந்த எண்­ணிக்கை 2018ல் 33,356ஆக­வும் 2017ல் 32,559ஆக­வும் பதி­வா­னது.

குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களும் அதி­க­ரித்து இருப்­பதை அந்த அறிக்கை காட்­டு­கிறது. 2018ஆம் ஆண்­டைக் காட்­டிலும் 2019ல் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் 4.5% கூடு­த­லா­கப் பதி­வா­கின. அதா­வது, குழந்தைகளுக்கு எதிராக 148,000 குற்றப் புகார்கள் பதி­வா­கின. அவற்­றில் 46.6% கடத்­தல் சம்­ப­வங்­கள் என்­றும் 35.3% பாலி­யல் குற்­றங்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பொது­வாக, 2018ஐக் காட்­டிலும் 2019ல் குற்­றச் சம்­ப­வங்­கள் 1.6% அதி­க­மா­கப் பதி­வாகின. நாளுக்கு 79 கொலை­கள் என்ற சரா­ச­ரி­யில் சென்ற ஆண்டு 28,918 கொலை­கள் நிகழ்ந்­தன.

இளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்

இதனிடையே, உத்­த­ரப் பிர­தே­ச மாநிலத்தின் ஹாத்ரஸ் நக­ரில் நால்­வர் கும்­ப­லால் சீர­ழிக்­கப்­பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின் உயி­ரி­ழந்த 19 வய­துப் பெண்­ணின் உடலை போலி­சார் நேற்று அதி­கா­லை­யில் எரித்­து­விட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்த தங்­களை வீட்­டிற்­கு உள்ளே வைத்து போலி­சார் பூட்­டி­விட்­ட­தாக அப்­பெண்­ணின் குடும்­பத்தார் குற்றம் சாட்டி உள்­ள­னர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வரிடம் நேரில் பேசியதை அடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!