சுடச் சுடச் செய்திகள்

வாடகை நிவாரணம் தொடர்பில் கூடுதல் உதவி

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை ­கள்) சட்­டத்­தில் மேற்கொள்ளப்பட்ட  சட்­டத் திருத்தங்கள் நேற்று முதல் நடை­மு­றைக்கு வந்­ததையடுத்து, கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் நிறு­வ­னங்­களும் தனி­ம­னி­தர்­களும் வாடகை நிவா­ர­ணம் தொடர்­பில் கூடு­தல் உதவி பெற­லாம் எனச் சட்ட அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதன்­மூ­லம் கொரோனா தொற்­றின் தாக்­கத்தை எதிர்­கொள்­வ­தில் நிறு­வ­னங்­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் சட்ட நடை­மு­றை­கள் மேலும் வலுப்­பெ­றும் என்று அமைச்சு கூறி­யி­ருக்­கிறது. இந்த மாற்­றங்­கள், வாடகை நிவா­ரண மதிப்­பீட்­டா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் அதி­கா­ரங்­களை வழங்கு ­வ­தோடு, கட்­டு­மா­னம் சார்ந்த தாம­தங்­க­ளால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் உதவி கிடைக்­க­வும் வழி­வகை செய்­கின்­றன.

புதிய விதி­க­ளின்­படி, வாடகை நிவா­ர­ணக் கட்­ட­மைப்­பின்­கீழ் வழங்­கப்­படும் வாட­கைக் கழிவு தொடர்­பான சச்­ச­ர­வு­களில் வாடகை நிவா­ரண மதிப்­பீட்­டா­ளர்­களே இனி முடி­வெ­டுக்கலாம். பரா­ம­ரிப்பு, சேவைக் கட்­ட­ணங்­கள் போன்ற பிரச்­சி­னை­க­ளால் தள்­ளு­ப­டித் தொகை பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

ஆயி­னும், வாட­கைத் தள்­ளு­படி தொடர்­பில் கட்­டட உரி­மை­யா­ளர்­களும் வாட­கைக்கு இருப்­போ­ரும் ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்டு, நடப்­பில் இருக்­கும் ஏற்­பா­டு­களை வாடகை நிவா­ரண மதிப்­பீட்­டா­ளர்­கள் மறு­ஆய்வு செய்ய மாட்­டார்­கள். அதே நேரத்­தில், வாட­கை­யில் எவ்­வ­ளவு தொகை­யைத் தள்­ளு­படி செய்­வது என்­பது தொடர்­பில் சச்­ச­ரவு இருப்­போர், அதனை மறு­ஆய்வு செய்­யும்­படி வாடகை நிவா­ரண மதிப்­பீட்­டா­ளர்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

அவர்­கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அல்­லது அதற்­கு­முன் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் இருந்து ரொக்க மானி­யம் தொடர்­பில் அறி­விப்­புக் கடி­தம் கிடைக்­கப் பெற்­றி­ருப்­பின் இம்­மா­தம் 14ஆம் தேதிக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும். செப்­டம்­பர் 30ஆம் தேதிக்­குப் பின் அத்­த­கைய அறி­விப்­புக் கடி­தத்­தைப் பெறு­ப­வர்­கள், கடி­தம் கிடைக்­கப் பெற்ற நாளில் இருந்து பத்து நாள்­க­ளுக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும்.

கட்­டு­மா­னம் சார்ந்த தாம­தங்­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் உதவி கிடைக்க புதிய சட்­டத் திருத்­தங்­களில் இடம்­பெற்­றுள்ள ஒரு நடை­முறை வழி­வ­குக்­கிறது. கட்­டு­மா­னப் பணிக்­கா­கப் பொருள்­களை வாட­கைக்கு எடுத்து, தாம­தம் அல்­லது ஒப்­பந்த விதி­மீ­றல் கார­ண­மாக  இப்­போது கூடு­தல் செல­வு­களை எதிர்­நோக்கு­ப­வர்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்க அந்த நடை­முறை இலக்கு கொண்­டுள்­ளது.

குடி­யி­ருப்பு அல்­லாத கட்­ட­டங்­களில் வாட­கைக்கு இருப்­ப­வர்­களில், வாட­கை­யில்­லாக் காலக்­கட்­டத்­திற்­குள் புதுப்­பிப்­புப் பணி­களை மேற்­கொள்ள முடி­யா­தோ­ருக்­கும் ஆத­ரவு கிடைக்­கும். வாட­கை­யில்­லாக் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­ப­டாத பகு­திக்கு நிவா­ர­ணம் வழங்­கக் கோரி வாட­கை­தா­ரர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்று சட்ட அமைச்சு கூறியுள்ளது.

இறு­தி­யாக, கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கட்­டு­மானப் பணி­களில் ஏற்­பட்ட தாம­தத்­தால் குறித்த காலத்­திற்­குள் பணி­களை முடித்து வாட­கை­தா­ர­ரி­டம் கட்­ட­டத்தை ஒப்­ப­டைக்க முடி­யாத, குடி­யி­ருப்பு அல்­லாத கட்­ட­டங்­க­ளின் உரி­மை­யா­ளர்­களும் இந்­தப் புதிய நடை­மு­றை­யின்­கீழ் உதவி பெற முடி­யும்.

உதவி கோரி விண்­ணப்­பிக்­கு­முன் விண்­ணப்­ப­தா­ரர்­கள் தங்­க­ளது பாதிக்­கப்­பட்ட ஒப்­பந்­தம் இவ்­வாண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி­யில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்­குள் ஏதே­னும் ஒரு கால­கட்­டத்­தில் நடை­மு­றை­யில் இருந்­தி­ருக்­கி­றதா என்­ப­தைச் சோதித்­துக்­கொள்ள வேண்­டும்.

அந்த ஒப்­பந்­தம் மார்ச் 25ஆம் தேதிக்­குள் நடப்­பிற்கு வந்து, இவ்­வாண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதிக்­கும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்­கும் இடையே தாம­தம் நிகழ்ந்­தி­ருக்க வேண்­டும்.

அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதிக்­குள் நிவா­ர­ணத்­திற்­கான விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும்.

அந்­தக் குறிப்­பிட்­டச் சூழல்­களில் தாம­தத்­தால் ஏற்­படும் தாக்­கத்­தைக் குறைக்­கும் நோக்­கில் சட்ட அமைச்­சால் நிய­மிக்­கப்­படும் மதிப்­பீட்­டா­ளர் ஒப்­பந்த விதி­களில் சில மாற்­றங்­க­ளைச் செய்­ய­லாம் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon