அமெரிக்க அதிபர் டிரம்ப்: அடுத்த சில நாட்களில் உண்மையான சோதனை காத்திருக்கிறது

கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது உடல்நிலை தேறியுள்ளதாக அவர் தங்கியிருக்கும் ராணுவ மருத்துவமனை அறையிலிருந்து கூறியிருக்கிறார்.

அவரது உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை முன்னுக்குப் பின் முரணாக கூறியிருந்ததைத் தொடர்ந்து, தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட நான்கு நிமிட காணொளியில் மேற்கண்டவாறு கூறினார். அந்தக் காணொளியில் அவர் சோர்வாகக் காணப்பட்டார்.

வால்டர் ரீட் ராணுவ மருத்துவக் கழகத்திற்கு தாம் வந்தபோது தமது உடல்நிலை “அவ்வளவாக நன்றாக இல்லை” என்று குறிப்பிட்ட திரு டிரம்ப், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தமது போராட்டத்தில் அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறினார். அமெரிக்க அதிபராக தமது பதவியில் கொவிட்-19 தொற்றுவதைத் தம்மால் தவிர்க்க முடியாது என்று அவர் சொன்னார்.

“எனக்கு வேறு வழியில்லை. வெள்ளை மாளிகையிலேயே அடைந்து கிடக்க நான் விரும்பவில்லை. நான் வெளியே செல்ல வேண்டும். ஒரு தலைவராக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

“வெள்ளை மாளிகையிலேயே தம்மைப் பூட்டி வைத்துக்கொண்டு வெளிப்புறத்தில் இருந்து வரும் சவால்களை எதிர்கொண்ட மாபெரும் தலைவர் எவருமில்லை,” என்று திரு டிரம்ப் காணொளியில் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு திரு டிரம்ப்புக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படி ராணுவ மருத்துவமனையில் தங்கி திரு டிரம்ப் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னணியில் ஜோ பைடன் இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், திரு டிரம்ப்பைவிட 10 புள்ளிகள் முன்னணி வகிப்பதாக நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

இருவருக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் இப்போது ஓரிரு புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தை திரு டிரம்ப் கடுமையாகக் கருதியிருந்தால், தமக்கு நோய் தொற்றுவதை அவர் நிச்சயமாக தவிர்த்து இருக்கலாம் என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுவதாக அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

நோய்த்தொற்றில் இருந்து திரு டிரம்ப் விரைவில் குணமடைய அவரது ஆதரவாளர்கள் விரும்பினாலும் இந்தக் கருத்துக்கணிப்பில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கொரோனா கிருமித்தொற்றின் கடுமையை இதுவரை குறைத்து மதிப்பிட்டு வந்த திரு டிரம்ப், காலப்போக்கில் அது தானாகவே மறைந்துவிடும் என்று கூறியிருந்தார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் திரு பைடன் முகக்கவசம் அணிந்து இருந்தது குறித்து திரு டிரம்ப் குறைகூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!