காப்பாற்றப்பட்ட வேலைகளில் பாதி ஜிஎஸ்எஸ் திட்டத்தால்: துணைப்பிரதமர்

கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொருளியல் பாதிப்பை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்திருப்பதாக துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கையால் உள்ளூர் வேலையின்மை விகிதத்தின் அதிகரிப்பு கிட்டத்தட்ட 1.7 விழுக்காடு குறையலாம் என்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் வேலை இழப்பு நேர்ந்தாலும் இந்த இரண்டு ஆண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 155,000 வேலைகள் காப்பாற்றப்படலாம். இதில் பாதிக்கு மேற்பட்ட வேலைகள் ஜேஎஸ்எஸ் எனப்படும் வேலைகள் ஆதரவுத் திட்டத்தால் காப்பாற்றப்படும் என்றார்.

இவ்வாண்டின் பொருளியல் 5.6 விழுக்காடு சுருங்குவதையும் அடுத்த ஆண்டின் பொருளியல் 4.8 விழுக்காடு சுருங்குவதையும் அரசாங்கத்தின் கடந்த நான்கு வரவு செலவுத் திட்டங்கள் ஒட்டுமொத்தமாகத் தடுக்கும் என்று சிங்கப்பூர் நணய ஆணையம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமிப்பரவலைக் கையாள சிங்கப்பூரின் நான்கு வரவு செலவுத் திட்டங்கள் மொத்தத்தில் 100 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இவற்றுடன் கடன்காரர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் சிறப்பு நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!