ஐவருக்கு மேல் கூட அனுமதிக்கப்படலாம்

ஐவருக்கு மேல் கூட அனுமதிக்கப்படலாம்

2 mins read
2a96ad85-8c0a-4331-b855-05080e2dae49
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அனை­வ­ரும் கவனமாகவும் விழிப்புடனும் நடந்துகொண்டு ஒத்துழைக்கும் பட்சத் தில் ஐவ­ருக்கு மேல் ஒன்­று­கூட அனு­ம­திப்­பது உட்­பட பல கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம் என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்து இருக்­கிறார்.

அப்­படி 'ஐவர் வரம்பு' விதி தளர்த்­தப்­படும் பட்­சத்­தில் பெரிய குடும்­பங்­கள் அல்­லது நண்­பர்­கள் குழு ஒன்­றா­கச் சந்­திக்­க­வும் உண­வ­ருந்­த­வும் முடி­யும்.

"குறிப்­பாக, ஒன்­றாக அமர்ந்து உண­வ­ருந்­து­வது குறித்­துக் கவ­லைப்­ப­டு­கி­றோம். சாப்­பி­ட­வும் பான­ம­ருந்­த­வும் முகக்­க­வ­சத்­தைக் கழற்ற வேண்­டும். அவ்­வே­ளை­யில் பேச­வும் முற்­ப­டு­வோம். அத­னால், முகக்­க­வ­சம் அணிந்து, பாது­காப்பு இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றும் நட­வ­டிக்­கை­க­ளைக் காட்­டி­லும் ஒன்­றாக உண­வ­ருந்­தும்­போது கொவிட்-19 தொற்­றும் அபா­யம் அதி­கம்," என்று அமைச்­சர் கான் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசி­ய­போது குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல், சமூக நட­வ­டிக்­கை­க­ளைப் பழைய நிலைக்­குக் கொண்டு வர ஏற்­கெ­னவே பல பெரிய நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் எடுத்­தி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி­யில் இருந்து அதி­க­மான ஊழி­யர்­கள் பணி­யி­டங்­க­ளுக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். மாநாடு, கருத்­த­ரங்கு போன்ற வேலை சார்ந்த நிகழ்ச்­சி­களில் 50 பேர் வரை பங்­கேற்­க­லாம்.

அதுபோல, திரு­ம­ணம், சமய நிகழ்­வு­களில் நூறு பேர் வரை கலந்­து­கொள்­ள­லாம்.

இருப்­பி­னும், மற்ற நாடு­க­ளின் அனு­ப­வங்­களில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்­டுள்­ள­தால் சமூக நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் இடம்­பெற அனு­ம­திப்­ப­தில் அதி­கா­ரி­கள் இங்கு கவ­ன­மாக இருந்து வரு­கின்­ற­னர் என்று திரு கான் குறிப்­பிட்­டார்.

"கட்­டுப்­பா­டு­கள் முன்­கூட்­டியே அல்­லது அவ­சர அவ­ச­ர­மா­கத் தளர்த்­தப்­படும் பட்­சத்­தில் கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­கள் மீண்­டும் அதி­க­ரிக்­க­லாம். இத­னால் மீண்­டும் சில கட்­டுப்­பாடு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­லாம். நீண்டகாலத்­திற்­குக் கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­வும் முடி­யாது. அப்­ப­டிச் செய்­வது நமது பொரு­ளி­ய­லி­லும் வாழ்க்­கை­யி­லும் மோச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி விடும்," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

சமூ­கத்­தில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறை­வாக இருப்­பது தற்­செ­ய­லா­னது அல்ல எனக் கூறிய அவர், நமது கூட்­டு­மு­யற்சி­யா­லும் கடின உழைப்­பா­லும் அர்ப்­ப­ணிப்­பு­க­ளா­லும் அது சாத்­தி­ய­மா­னது என்­றும் குறிப்­பிட்­டார்.

இத­ற்கிடையே, மேலும் பல நடவ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­கு­வது குறித்து தமது அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் திட்­டங்­கள் தயா­ரா­ன­தும் அவை குறித்த விவ­ரங்­கள் பகிர்ந்துகொள்­ளப்­படும் என்­றும் கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் முன்­ன­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.