'சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு உலகிலேயே ஆகச் சிறந்தது'

'சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு உலகிலேயே ஆகச் சிறந்தது'

2 mins read
d68b09d9-9e53-43ff-be31-b020265f1a0d
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் பொதுப் போக்­கு­வரத்துக் கட்­ட­மைப்பு உல­கி­லேயே ஆகச் சிறந்­தது என்று அமெரிக்காவை சேர்ந்த பய­ணத்­துறை இணை­யப் பக்­க­மான 'ஃபார் & வைட்' தெரி­வித்­துள்­ளது. ஹாங்­காங், லண்­டன் போன்ற உல­கின் மற்ற பெரு­ந­க­ரங்­களை சிங்­கப்­பூர் முந்­தி­விட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும் பய­ணி­கள் மன­நிறைவு அடை­வது, கட்­டுப்­ப­டி­யான பய­ணக் கட்­ட­ணங்­கள் போன்ற அம்­சங்­களை அது சுட்­டி­யது. சிங்­கப்­பூ­ரில் நாள் ஒன்­றுக்கு பேருந்து, ரயில்­களில் வரையறை அற்ற பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு சுற்­றுப்­ப­ய­ணி­கள் $10 செலுத்­து­கின்­ற­னர். சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­கான இது­போன்ற பயண அட்­டை­க­ளுக்கு ஸ்பெ­யின் தலை­ந­கர் மட்­ரிட்­டில் $13ம் பிரிட்­டிஷ் தலை­ந­கர் லண்­ட­னில் $22ம் கட்­ட­ணம் விதிக்­கப்­படு­கிறது.

ஹாங்­காங்­கில் சுற்­றுப்­ப­ய­ணி­களுக்­கான பயண அட்­டை­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு $10 கட்­ட­ணம் விதிக்­கப்­ப­டு­கிறது. ஆனால், மூன்று முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்­கான பயண அட்­டை­களுக்கு $5 கட்­ட­ணம் விதிக்­கப்­படுகிறது.

சிங்­கப்­பூ­ரில் 0.9 மீட்­ட­ருக்­கும் அதற்­கும் குறை­வான உய­ர­மு­டைய சிறு­வர்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் இல­வ­ச­மா­கப் பயணம் மேற்­கொள்­ள­லாம். ஆகச்­ சி­றந்த பொதுப் போக்­கு­வரத்­துக் கட்­ட­மைப்­பைக் கொண்ட நக­ரங்­கள் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் முத­லி­டம் வகித்­த­தாக 2018ல் ஆய்வு நிறு­வ­ன­மான 'மெக்­கின்சி' நடத்­திய அனைத்­து­லக ஆய்வு ஒன்­றில் தெரிய வந்­ததை 'ஃபார் & வைட்' சுட்­டி­யது. அந்த ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­க­ளில் 86 விழுக்­காட்­டி­னர், சிங்­கப்­பூ­ரின் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­து­வ­தில் மன­நி­றைவு கொண்­டி­ருந்­த­னர். முன்­னணியில் இருக்­கும் 10 நக­ரங்­களிலேயே இது­தான ஆக அதிக விழுக்­காடு.

பல அம்­சங்­களில் தொழில்­நுட்ப வச­தி­கள் உடைய சிங்­கப்­பூர் மீது சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு அதிக எதிர்­பார்ப்­பு­க­ள் கொண்­டி­ருப்­ப­தாக 'ஃபார் & வைட்' குறிப்­பிட்­டது.

எம்­ஆர்டி கட்­ட­மைப்­பின் நம்­ப­கத்­தன்­மையை மேலும் உயர்த்த பெரி­ய­ள­வி­லான திட்­டங்­களை அர­சாங்­கம் முன்­னெ­டுப்­பதை அந்­த நி­று­வ­னம் சுட்­டி­யது. பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்­பைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­தும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக, வடக்கு தெற்கு மற்­றும் கிழக்கு மேற்கு ரயில் தடங்­களில் சேவை­யில் விடு­வ­தற்கு 40 புதிய ரயில்­களைத் தான் வாங்­கி­யுள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கடந்த மாதம் அறி­வித்­தி­ருந்­தது.

புதிய ரயில்­க­ளின் முதல் தொகுதி, 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து சேவைக்கு விடப்­படும்.