மூன்றாம் கட்டத் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு

கொவிட்-19 நோய்ப் பர­வல் கட்டுப்­ பா­டு­கள் கட்­டம் கட்­ட­மா­கத் தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், மூன்­றாம் கட்­டத் திறப்பு எப்­போது என்­பது உள்­ளிட்ட விவ­ரங்­களை அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு வரும் வாரங்­களில் வெளி­யி­டும் என துணைப் பிரதமர் ஹெங் தெரி­வித்­துள்­ளார்.

மூன்­றாம் கட்­டத் திறப்­பிற்­கான எதிர்­பார்க்­கப்­படும் கால வரை­யறை, குழு ஒன்­று­கூ­டல்­களில் எத்­தனை பேர் இடம்­பெ­ற­லாம் என்ற நிபந்­த­னை­களில் மாற்­றங்­கள், அதி­க­மா­னோர் கூடும் நிகழ்­வு­களில் பங்­கேற்­பது உள்­ளிட்­டவை குறித்த அறி­விப்­பு­கள் அதில் இடம்­பெ­றும்.

“கொரோ­னா­விற்கு எதி­ரான போரில் நாம் இப்­போது நிலை­யாக இருந்தாலும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும். நிச்­ச­ய­மில்­லாச் சூழல்­க­ளுக்கு இடையே, கொரோ­னா­வுடன் இணைந்து வாழும் வகை­யில் நாம் மாறி வரு­கி­றோம்,” என்று திரு ஹெங் சொன்­னார்.

வரும் மாதங்­களில் மேலும் பல நட­வ­டிக்­கை­க­ளைப் பாது­காப்­பாக மீண்­டும் தொடங்­கு­வ­தற்கு ஏது­வாக, கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக சிறந்த முறை­யில் போரிட சிங்­கப்­பூர் நான்­கு­முனை உத்­தி­க­ளைக் கையாண்டு வரு­வ­தாக துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

செய­லாற்­றல்­மிக்க தடுப்­பூ­சி­களைக் கூடிய விரை­வில் கைக்­கொள்­ளு­தல், பரி­சோ­த­னைச் செயல்­தி­றன்­களை மேம்­ப­டுத்­து­தல், தட­ம­றி­த­லை­யும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வதை­யும் துரி­தப்­ப­டுத்­து­தல், பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்றி நடத்­தல் ஆகி­ய­வையே அந்­நான்கு உத்­தி­கள்.

பாது­காப்­பான, செயல்­தி­றன்­மிக்க தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் பட்­சத்­தில், அவற்றை விரைந்து பெறும் நோக்­கில் சிங்­கப்­பூர் துடிப்­பு­டன் பணி­யாற்றி வரு­வ­தாக திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

கொரோனா பரி­சோ­த­னை­களைப் பொறுத்­த­மட்­டில், ‘பிசி­ஆர்’ சோத­னை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்டு, நாளுக்கு 40,000 ஆய்­வ­கப் பரி­சோ­த­னை­கள் என்ற இலக்­கை நெருங்­கி­விட்­ட­தாக அவர் சொன்­னார்.

கிருமி தொற்­றி­யோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை விரைந்து கண்­ட­றிந்து, அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வதன் மூலம் கொரோனா பர­வ­லைத் தடுக்க முடி­யும் என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

“நமது தட­ம­றி­யும் குழு­வி­னர் மிகச் சிறப்­பா­கப் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். மின்­னி­லக்­கக் கரு­வி­களை­யும் அவர்­கள் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். டிரேஸ்­டு­கெ­தர் செயலி, நாடு முழு­வ­தும் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரும் தட­ம­றி­தல் கரு­வி­கள், சேஃப்என்ட்ரி திட்­டம் ஆகி­யவை விரைந்து தடமறிய கைகொ­டுத்து வரு­கின்­றன,” என்­றார் அவர்.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து பின்­பற்ற வேண்­டும் என வலி­யு­றுத்­திய திரு ஹெங், “நமது பொரு­ளி­யலை பாது­காப்­பாக மீண்­டும் திறப்­ப­தற்­குச் சமூ­கத்­தில் கிரு­மிப் பர­வ­லைக் குறை­வாக வைத்­தி­ருப்­பது முக்­கியம்,” என்­றும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!