புதன்கிழமை நிலவரப்படி இன்று புதிதாக 10 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 57,840க்கு உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் நால்வர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு வெளியே இக்கிருமி தொற்றி இங்கு வந்துள்ள ஆறு பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

