வெளிநாட்டு ஊழியர்களுக்காக 3 இரவு நேர இலவச மருந்தகங்கள்; உடனடி மருத்துவ சிகிச்சைக்காக புதிய ஏற்பாடு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அவர்கள் தீவின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் 3 இலவச இரவு நேர வட்டார மருந்தகங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத் தேவைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியிலிருந்து 13 வட்டார, வேலையிட மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

FWMOMCare செயலி மூலம் நடமாடும் மருந்தகக் குழுக்கள், தொலைமருத்துவம் ஆகியவையும் அந்த நிலையங்களுக்கு வலு சேர்ப்பதாக மனிதவள அமைச்சு இன்று (அக்டோபர் 9) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்படும் அபாயம் விடுதிகளில் தொடர்வதால், அங்கு வசிக்கும் ஊழியர்கள் அவசரமில்லாத மருத்துவத் தேவைகளுக்கு அரசாங்கம் வழங்கும் மருத்துவ வசதிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மனிதவள அமைச்சு முன்பு தெரிவித்திருந்தது.

சமூகத்தில் இருக்கும் பொது மருந்தகங்களில் வழங்கப்படும் வெளிநோயாளி சேவைகளைப்போல குறுகிய கால மற்றும் நீண்டகால சுகாதரப் பிரச்சினைகளுக்கும் மனநலப் பிரச்சினைகளுக்கும் இந்த மருத்துவ நிலையங்கள் சிகிச்சை அளிக்கும்.

ஆனால், அந்த நிலையங்கள் தற்போது மாலை 6.30 மணி வரை மட்டுமே இயங்கும். முன்பதிவுகளும் செய்யப்பட வேண்டும்.

இருப்பினும், ‘டெலிமெடிசின்’ எனப்படும் தொலைமருந்தக வசதி எந்நேரமும் கிடைக்கும்.

கிருமித்தொற்று குழுமம் கண்டறியப்பட்டால் நடமாடும் மருந்தக குழுக்களும் பணியில் இறக்கப்படும்.

புதிய இரவு நேர மருந்தகங்கள் மாலை 6.30 முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுவதுடன், ஊழியர்கள் மருத்துவர்களைப் பார்த்து நேரடி ஆலோசனை பெறலாம்.

இந்தப் புதிய இரவு நேர மருந்தகங்கள், தீவின் தென்மேற்குப் பகுதியில் ஸ்பேஸ்@துவாஸ் மனமகிழ் நிலையம், வடக்குப் பகுதியில் கோச்ரேன் மனமகிழ் நிலையம், கிழக்குப் பகுதியில் காக்கி புக்கிட் மனமகிழ் நிலையம் ஆகிய இடங்களில் செயல்படும்.

இந்த மருந்தகங்களின் பயன்பாட்டைப் பொறுத்து, கூடுதல் எண்ணிக்கையில் இதுபோன்ற மருந்தகங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

விடுதிகளின் வட்டார பொறுப்பாளர்கள் மூலம் ஊழியர்களும் விடுதி நடத்துநர்களும் இந்தச் சேவைக்கு முன்பதிவு செய்யலாம். அதனையடுத்து, விடுதியில் வசிப்போருக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும்.

ஸ்பேஸ்@துவாஸ் மனமகிழ் நிலைய மருந்தகத்துக்கு முன்பதிவு செய்ய 8349 1374 என்ற எண்ணிலும் காக்கி புக்கிட் மனமகிழ் நிலைய மருந்தகத்துக்கு முன்பதிவு செய்ய 8933 7687 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

கோச்ரேன் மனமகிழ் நிலைய மருந்தகத்துக்கு முன்பதிவு செய்ய 8933 7756, 85444250 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

விடுதிகளில் அல்லாமல் உள்ளூர் சமூகத்தில் வசிக்கும் ஊழியர்களுக்கு அவர்களது நிறுவனங்கள் வாகன ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

உடல் நலக் குறைவு ஏற்பட்டால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் என மனிதவள அமைச்சு வலியுறுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!