சிங்கப்பூரில் வெளிநாட்டினர் இருப்பதற்கு அதிக நேர்மறை கருத்துகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டினர் இருப்பதற்கு அதிக நேர்மறை கருத்துகள்

2 mins read
5cbb74b8-3111-4426-9418-3d3c9193d01c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டினர் இங்கு இருப்­பது பற்றி பெரும்­பா­லான சிங்கப்பூரர்கள் நேர்மறைக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிறிய பிரி­வி­னர் மட்­டும் எதிர்­ம­றை­யா­கக் கூறி­னர்.

மேலும், வெளி­நாட்­டி­னரை சிங்­கப்­பூர் அனு­ம­திப்­பது தொட­ர­வேண்­டும் என்­னும் கருத்தை இங்­குள்ள பெரும்­பா­லா­ன­வர்­கள் ஆத­ரிப்­ப­தாக தான் நடத்­திய கருத்­தாய்­வில் தெரிய வந்­த­தாக அர­சாங்­கக் கருத்­த­றி­யும் தள­மான 'ரீச்' குறிப்பிட்டுள்ளது.

இது­தொ­டர்­பான ஆய்வை ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ­'ரீச்' நடத்­தி­யது.

அங்­கொன்­றும் இங்­கொன்­று­மா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 15 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­தை­யும் உடைய சுமார் 2,100 சிங்­கப்­பூ­ரர்­கள் ஆய்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் தொடர்ந்து வெளி­நாட்­டி­னரை அனு­ம­திப்­பது அவ­சி­ய­மா­னது என்­னும் கருத்தை அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள், அதா­வது 63 விழுக்­காட்­டி­னர் ஆத­ரித்­த­னர். அவர்­களில் சிலர் இக்­க­ருத்தை வலு­வாக ஆத­ரித்­த­னர்.

அதே நேரம் பத்து விழுக்­காட்­டி­னர் அந்­தக் கருத்தை ஆத­ரிக்­க­வில்லை. ஆத­ர­வா­க­வும் எதிர்ப்­பா­க­வும் இல்­லா­மல் நடு­நிலை வகித்­த­வர்­கள் 25 விழுக்­காட்­டி­னர் என்ற 'ரீச்' நேற்று வெளி­யிட்ட ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஒட்­டு­மொத்­த­மாக ஆய்­வில் பங்­கேற்ற 2,000க்கு மேற்­பட்­டோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர் குடி­மக்­கள் அல்­லா­தோர் இங்கு இருக்­கும் கருத்­திற்கு நடு­நி­லை­யான பதி­லைத் தெரி­வித்­த­னர்.

அதே நேரம் வெளி­நாட்­டி­னர் இங்கு இருப்­பதை ஆத­ரித்து 35 விழுக்­காட்­டி­ன­ரும் எதிர்த்து 14 விழுக்­காட்­டி­ன­ரும் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

குறிப்­பாக, வேலை இல்­லா­த­வர்­களே அதி­ருப்தி தெரி­வித்­த­வர்­களில் அதி­கம். அவர்­களில் 26 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­டி­னர் இங்கு இருப்­பதை எதிர்க்­கின்­ற­னர்.

தற்­போது சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் வெளி­நாட்டு நிபு­ணர்­கள் அங்­கம் வகிக்­கும் அம்­சம் சர்ச்­சை­யைக் கிளப்பி வரு­கிறது.

வேலை­யின்மை அதி­க­ரித்து நிலை­யற்ற நில­வ­ரம் காணப்­ப­டு­வ­தால் இவ்­வி­வ­கா­ரம் மக்­க­ளி­டையே விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தோடு வேலை நிய­மன நடை­மு­றை­களில் பார­பட்­சம் இருப்­ப­தாக குறை­கூ­றல் எழுந்­தது.

அத­னைத் தொடர்ந்து அது­போன்ற நடை­மு­றை­களில் ஈடு­பட்ட 400 நிறு­வ­னங்­கள் நியா­ய­மான பரி­சீ­ல­னைக் கட்­ட­மைப்­பின் கண்கா­ணிப்­பில் இருப்­ப­தாக மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கடந்த மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ரீச் கருத்­தாய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 16 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­டி­ன­ரின் சமூ­கப் பழக்­க­வ­ழக்­கங்­கள் குறித்து கவலை தெரி­வித்­த­னர். சத்­த­மா­கப் பேசு­வது, தூய்­மை­யில் கவ­னம் செலுத்­தாது போன்ற அம்­சங்­களை அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

வேலை உரு­வாக்­கத்­தில் இந்த வட்­டா­ரத்­தின் மைய­மாக சிங்­கப்­பூர் திகழ்­வ­தால் நன்­மை­கள் உண்டு என்­பதை பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் ஆத­ரித்­த­னர்.

சில வேலை­கள் வெளி­நாட்­டி­ன­ருக்­குச் சென்­றா­லும் தர­மான வேலை வாய்ப்­பு­களை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தித் தரும் சிங்­கப்­பூர் ஒரு வட்­டார மைய­மா­கத் திகழ்­வது நன்­மையே என சுமார் 81 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

அதே நேரம் சிங்­கப்­பூர் அவ்­வா­றி­ருக்­கத் தேவை இல்லை என­வும் வெளி­நாட்­டி­னர் எண்­ணிக்­கையை குறைக்­க­லாம் என்­றும் எஞ்­சிய 19 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

குடிமக்கள் அல்லாதோரை தொடர்ந்து அனுமதிப்பதில் ஒருசிலரிடமே அதிருப்தி