குறைந்த வருவாய் ஊழியர் சம்பளத்தை அதிகரிக்க சிறப்புப் பணிக்குழு

குறைந்த வரு­மா­னம் உள்ள ஊழியர்­க­ளின் சம்­ப­ளத்தை எப்­படி கூட்­ட­லாம் என்­பது பற்றி ஆராய ஒரு புதிய சிறப்­புப் பணிக்­குழு அமைக்­கப்­பட்டு இருக்­கிறது. அந்­தப் பணிக்­குழு உற்­பத்­தித் திறன் வள­ர­வும் வழி­களை ஆராயும்.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் இது பற்றி நேற்று தமது ஃபேஸ்புக்­கில் அறி­வித்­தார்.

‘குறைந்த சம்­பள ஊழி­ய­ருக்­கான முத்­த­ரப்பு பணிக்­குழு’ என்று அந்­தப் புதிய குழு குறிப்­பி­டப்­படும். அந்­தக் குழு படிப்­ப­டி­யாக சம்­ப­ளம் உயர்த்­தப்­படும் முன்­மா­திரி ஏற்­பாட்டை எப்­படி விரி­வு­ப­டுத்­த­லாம் என்­பது பற்றி ஆரா­யும்.

நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு உற்­பத்­தித்திறனை உயர்த்தி முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் எப்­ப­டி­யெல்­லாம் நன்­மை­களை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­பது பற்­றி­யும் அந்­தக் குழு அலசி ஆரா­யும் என்று திரு இங் தெரி­வித்தார்.

மனி­த­வள அமைச்­சர் ஜோசஃபின் டியோ, சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்மேள னத்தின் ­தலை­வர் ராபர்ட் யாப் இரு­வரும் நேற்று சந்­தித்­த­னர். அதன் பல­னாக சிறப்­புப் பணிக்­குழு உரு­வாகி இருப்பதாக திரு இங் மேலும் தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள ஏற்­பாடு பற்­றிய யோச­னையை 2012ல் என்­டி­யுசி தெரி­வித்­தது. அது முதல் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளை அதிகமாகக் கொண்ட பல துறை­களில் அந்த ஏற்­பாடு நடப்­புக்கு வந்­தி­ருக்­கிறது.

துப்­பு­ரவு, பாது­கா­வல் தொழில்­து­றை­களில் ஏறக்­கு­றைய 80,000 ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் இப்­போது அதி­க­ரித்து இருக்­கிறது.

அந்­தப் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு ஏற்­பாட்­டின் கீழ் இந்­தத் துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­களின் அடிப்­படை சம்­ப­ளத்­தில் ஆண்­டு­தோ­றும் உயர்வு இடம்­பெ­று­கிறது என்­பதை திரு இங் சுட்­டிக்­காட்­டி­னார். இதர பல திட்­டங்­க­ளின் மூல­மா­க­வும் சம்­ப­ளங்­கள் மேலும் உயர்த்­தப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கழிவு நிர்­வா­கத் துறை­யி­லும் இந்த ஏற்­பாட்டை மேம்படுத்த­லாம் என்ற யோசனையை என்­டி­யுசி அர­சாங்­கத்­தி­டம் தாக்­கல் செய்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!