கொவிட்-19க்கு நிகரான டெங்கி உயிரிழப்புகள்

கொவிட்-19க்கு நிகரான டெங்கி உயிரிழப்புகள்

2 mins read
834bb846-94e9-4019-8cc5-8fd882b898ae
-

டெங்­கி­யால் இந்த ஆண்டு 28 பேர் உயி­ர் இழந்­து ­விட்­ட­னர். இது­வரை இல்­லாத இந்த உச்­சம், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்­கைக்கு நிக­ராகி­ உள்­ளது. டெங்­கி­யால் 15 ஆண்­டு­களுக்கு முன் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை முழு ஆண்­டுக்­கும் 25ஆக இருந்­தது. ஆனால், அதைப் பின்­னுக்­குத் தள்­ளி­விட்­டன இவ்­வாண்­டில் இது­வரை பதி­வான உயி­ரி­ழப்­பு­கள்.

இது­வரை 28 பேர் டெங்கி பாதிப்­பால் உயி­ரி­ழந்­துள்­ளதை உறு­திப்­படுத்­திய சுகா­தார அமைச்சு, பலி­யா­ன­வர்­கள் 25 வய­துக்­கும் 92 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று தெரி­வித்­தது. இந்த 28 சம்­ப­வங்­களில் 24 பேரின் வேலை­யி­டங்­கள் அல்­லது வீடு­கள், டெங்­கிக் குழு­மங்­கள் வீரி­யம் பெற்­றி­ருந்த இடங்­களில் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மேலும், செப்­டம்­பர் 5க்குப் பிறகு கடந்த ஐந்து வாரங்­களில் மட்­டும் ஏழு உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இன்­ன­மும் வீரி­யம் பெற்ற 176 டெங்கி குழு­மங்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ள­தென நேற்று முன்­தின நில­வ­ரப்­படி கூறப்­பட்­டது. இதில் ஒன்று, அதி­வீ­ரி­ய­மா­ன­தா­கக் கரு­தப்­படும் குழு­மம். 300 அல்­லது அதற்கு மேற்­பட்­டோர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் அந்த குழு­மம் தொடர்ந்து வீரி­யம் உடை­ய­தாக உள்­ளது. இவ்­வாண்டு மே 19ஆம் தேதி தொடங்­கிய அல்­ஜு­னிட் மற்­றும் கேலாங் வட்­டா­ரக் குழு­மத்­தில் குறைந்­தது 324 டெங்­கிச் சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றி­லேயே இவ்­வாண்­டின் டெங்­கிப் பர­வலே ஆக மோச­மா­னது என்று கூறப்­படு­கிறது. 41 வாரங்­களில் 31,338 டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­விட்­டன. 2013ஆம் ஆண்­டில் ஆக அதி­க­மான டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அப்­போது இருந்த 22,170 சம்­ப­வங்­க­ளைக் காட்­டி­லும் இவ்­வாண்­டின் டெங்­கிச் சம்­ப­வங்­கள் மிக அதி­க­மாக உள்­ளன.

வழக்­க­மாக மே முதல் அக்­டோ­பர் வரை வெப்ப காலத்­தில் டெங்­கிச் சம்­ப­வங்­கள் உச்­சத்­தைத் தொடும் என்று கூறப்­ப­டு­கிறது.