துணைப் பிரதமர்: இவ்வாண்டில் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு $5.9 பி. வழங்கப்பட்டுள்ளது

சிங்­கப்­பூர் குடும்­பங்­களில் உள்ள ஒவ்­வோர் உறுப்பினருக்கும் கொவிட்-19 சார்ந்த ஆத­ர­வாக சரா­ச­ரி­யாக $1,500 வெள்ளி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளின் அன்­றா­டச் செல­வு­க­ளுக்­குக் கைகொ­டுப்­ப­தற்­காக சமூக மேம்­பாட்டு மன்­றங்­களால் கடந்த ஜூன் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தின் மூலம் 300,000க்கும் அதி­க­மான சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் பய­ன­டைந்­துள்­ளன.

அதன் இரண்­டா­வது பகு­தி­யாக, $50 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­கள் அடுத்த சில மாதங்­களில் வழங்­கப்­படும் என்று நிதி­ய­மைச்­ச­ரும் பொரு­ளி­யல் கொள்­கைகளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சரு­மான திரு ஹெங் கூறி­னார்.

இரு­நாள் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின் இறு­தி­யில் நேற்று உரை ஆற்றியபோது நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு ஹெங் இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­களைக் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும் என்று அர­சாங்­கம் உறு­தி­யான முடி­வு எடுத்து, இவ்­வாண்­டில் $5.9 பில்­லி­யன் தொகையை குடும்­பங்­களுக்கு வழங்கி உள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார்.

“ஒரே ஆண்­டில் வழங்­கப்­பட்ட தொகை­யில் இதுவே ஆக அதி­கம்,” என்­றார் திரு ஹெங். பல்­வேறு ஆத­ர­வுத் திட்­டங்­கள் மூல­மாக 2.8 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான சிங்­கப்­பூர்­வா­சி­கள் ரொக்க வழங்­கு­தொகை பெற்று பய­ன­டைந்­துள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

சரா­ச­ரி­யாக ஒவ்­வொரு குடும்ப உறுப்­பி­ன­ருக்­கும் 1,500 வெள்ளி என்­பது கிட்­டத்­தட்ட அவர்­க­ளின் அரை மாத ஊதி­யத்­திற்கு நிக­ரா­னது.

குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு பரா­ம­ரிப்பு, ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டம் மூலம் அதிக உதவி கிட்­டி­யது என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, உள்­ளூர் உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள், வர்த்­த­கர்­களுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தை­யும் இலக்­கா­கக் கொண்­டுள்ள சமூக மேம்­பாட்டு மன்ற பற்­றுச்­சீட்­டுத் திட்­டம், 8,000க்கும் மேற்­பட்ட வர்த்­த­கர்­களை ஈர்த்­துள்­ளது.

‘ஜிஎஸ்டி உயர்வைக் காலவரம்பு இன்றி தள்ளிப்போட முடியாது’

அடுத்த ஆண்­டி­லும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 7 விழுக்­கா­டாக நீடிக்­கும்.

என்­றா­லும், நீண்­ட­கால நோக்­கில் நாட்­டின் நிலையை உறுதி செய்ய, அதன் செல­வுத் தேவை­களுக்கு ஆத­ர­வ­ளிக்க வரு­மா­னம் தேவைப்­ப­டு­கிறது என்­ப­தால் ஜிஎஸ்டி உயர்­வைக் கால வரம்­பு இன்றித் தள்­ளிப்­போட முடி­யாது என்று திரு ஹெங் தெரி­வித்­தார்.

“ஜிஎஸ்டி விகி­தத்தை எப்­போது உயர்த்­து­வது என்­ப­தைத் தொடர்ந்து கவ­ன­மாக ஆராய்­வோம்,” என்று அவர் கூறி­யுள்­ளார்.

‘திறந்த நாடாகத் திகழவேண்­டும்’

சிங்­கப்­பூர் கொவிட்-19 தொற்­றுப் பர­வல் சீர­டைந்து, பொரு­ளி­யல் மீட்­சி­யில் கவ­னம் செலுத்­தத் தொடங்கி இருந்­தா­லும் சிங்­கப்­பூர் திறந்த நாடா­க­வும் உல­கத்­து­டன் தொடர்­பில் இருக்க வேண்­டி­ய­தும் அவ­சி­யம் என்று துணைப் பிர­த­மர் ஹெங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரின் வெற்­றிக்கு நாடு, நக­ரம் என இரு அடை­யா­ளங்­களை­யும் கட்­டிக்­காப்­பது முக்­கி­யம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஒரு நக­ர­மாக புதிய, ஆர்­வத்­தைத் தூண்­டும் யோச­னை­க­ளுக்­குச் செவி­ம­டுக்க வேண்­டும் என்­றும் ஒரு நாடாக, ஒற்­று­மை­யாக இருந்து, அதன் சுதந்­தி­ரத்­தைத் தற்­காக்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

“இந்த முரண்­பட்ட நோக்­கங்­கள், தெரி­வு­கள் அல்ல. ஆனால், நமக்­கான தேவை­கள்,” என்­றார் துணைப் பிர­த­மர்.

நான்கு மில்­லி­யன் என்ற சிறிய உள்­ளூர் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட சிங்­கப்­பூர், உல­கிற்குப் பொருத்­த­மா­ன­தா­க­வும் பய­னுள்­ள­தா­க­வும் திகழ ‘சாத்­தியமுள்ள சிறந்த குழுவை’ அணி­தி­ரட்ட வேண்­டி­யுள்­ளது என்று துணைப் பிரதமர் தெரி­வித்­தார்.

“ஒவ்­வொ­ரு­வ­ரின் வலி­மை­களை­யும் அறிந்து, ஒரு குழு­வாக இணைந்து பணி­யாற்­றும் வகை­யில் நமது அணி­யில் சிறந்த ஆட்­டக்­கா­ரர்­கள் இருப்­பதை உறுதி­செய்ய விரும்­பு­கி­றோம்.

“அத­னால்­தான் உல­கம் முழு­வதும் இருந்­தும் சிறந்த திற­னா­ளர்­களை வர­வேற்­கத் தயா­ராக இருக்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­வ­தன் மூலம் சிறந்த குழுவை முன்­னி­றுத்தி, உலக அரங்­கில் அடி­யெ­டுத்து வைக்க முடி­யும்,’ என்று திரு ஹெங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!