முதலாளிகளுக்கு தேசிய சம்பள மன்றம் பரிந்துரை: ஆட்குறைப்புக்குப் பதிலாக சம்பளத்தைக் குறைக்கலாம்

கொவிட்-19 சூழ்நிலையில் சிங்கப்பூர் சிர­ம­மா­ன கால­கட்­டத்தை எதிர்நோக்கி­ இ­ருக்­கும் வேளை­யில் மக்­கள் வேலை­களை இழப்­ப­தை­யும் தவிர்த்­தாக வேண்­டும்.

இதை முக்­கி­ய­மாக கவ­னத்­தில் கொண்ட சிங்­கப்­பூர் சம்­பள மன்­றம் புதிய பரிந்­து­ரை­களை நேற்று வெளி­யிட்­டது.

அதன்­படி வேலை­க­ளைத் தக்க வைத்­துக்­கொள்ள தற்­கா­லி­க­மாக ஊதிய குறைப்­பு­க­ளைச் செய்­ய­லாம் என்று முத­லா­ளி­க­ளுக்கு மன்­றம் பரிந்­துரை செய்­துள்­ளது.

ஆனால் சம்­ப­ளக் குறைப்பை மேற்­கொள்­வ­தற்கு முன்பு ஊழி­யர்­க­ளின் ஆத­ர­வைப்­பெற வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய மன்­றம், குறைக்­கப்­பட்ட சம்­ப­ளம் பின்­னர் வழக்­க­நி­லைக்­குத் திரும்பி­ வி­டும் என்­பதை ஊழி­யர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­யது.

புதிய வழி­காட்­டி­கள், நவம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரை­யில் அம­லில் இருக்­கும்.

புதிய வழி­காட்­டி­கள் கட்­டா­ய­மல்ல. என்­றா­லும் அவற்றை அர­சாங்­கம் ஏற்­றுக் கொண்­டுள்­ளது.

இவ்­வாண்டு இரண்­டா­வது முறை­யாக சம்­ப­ள மன்­றம் கூடி­யது. இதில் சம்­பள வெட்­டுக்கு ஆறு முக்­கிய அம்­சங்­களை மன்­றம் வகுத்­துள்­ளது.

சம்­ப­ளத்தை சரி­செய்­வ­தற்­காக ஆண்டு, மாத மாறு­விகித தொகையை முத­லா­ளி­கள் பயன்­ப­டுத்­து­வது குறித்­தும் வழி­காட்­டி­களில் விளக்­கப்­பட்­டுள்­ளது.

ஆள் குறைப்­பு­க­ளைத் தவிர்க்க வேண்­டி­ய­பட்­சத்­தில் அடிப்­படை சம்­ப­ளத்தை மட்­டுமே குறைக்க வேண்­டும். இதில் நிர்­வா­கத்­தி­னர் தங்­க­ளு­டைய சம்­ப­ளத்தை முன்­கூட்­டியே அதி­கப்­ப­டி­யா­கக் குறைத்து முன்­னு­தா­ர­ண­மா­கத் திகழ வேண்­டும்.

$1,400க்கும் குறை­வாக சம்­ப­ளம் ஈட்­டு­வோ­ருக்கு ஊதிய உயர்­வுக்­குப் பதி­லாக சம்­ப­ளத்தை வெட்­டா­மல் இருக்­க­லாம். ஆனால் $1,400க்கு மேல் ஊதி­யம் பெறு­வோ­ருக்கு சம்­ப­ளத்தை வெட்­டி­னா­லும் அடிப்படை சம்­ப­ளம் $1,400க்குக் கீழ் குறை­யா­மல் பார்த்துக்­கொள்ள வேண்­டும் என்று மன்­றத்­தின் பரிந்­து­ரை­கள் கூறு­கின்­றன.

கடந்த 1972ல் சம்­பள மன்­றம் அமைக்­கப்­பட்ட பிறகு நான்­கா­வது முறை­யாக ஒரே ஆண்­டில் இவ்­வாண்டு 2வது முறை­யாக கூடி­யது.

சென்ற மூன்று முறை­யும் பொரு­ளி­யல் சிர­ம­மா­ன கால­கட்­டத்­தில் கூட்­டப்­பட்­டது.

சம்­பள மன்­றத்­தின் தலை­ வரான பீட்­டர் சியா, இம்­முறை பிரச்­சி­னை­கள் சிக்­க­லா­ன­தாக இருந்­த­தால் நீண்­ட­நே­ரம் விவா­திக்க வேண்­டி­யி­ருந்­தது என்­றார்.

“நிறு­வ­னங்களுக்கும் அதே சம­யத்­தில் ஊழி­யர்­க­ளுக்­கும் நன்­மை­ய­ளிக்­கும் தீர்­வு­க­ளைக் கண்­ட­றிய முத்­த­ரப்­புக் குழு­வி­னர் விட்­டுக்­கொ­டுத்­துச் செயல்­பட்­ட­னர்,” என்று அவர் குறிப்­பிட்­டார்.

சம்­பள மன்­றத்­தின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் தலை­வர் மேரி லியவ், ஊழி­யர்­களைத் தக்கவைத்­துக் கொள்­வ­தி­லும் மாற்று வேலைக்கு அனுப்­பு­வ­தி­லும் சிர­மம் ஏற்­பட்­டால் இறுதி முயற்­சி­யாக ஆட்­கு­றைப்­புக்­குப் பதி­லாக ஊதி­யக் குறைப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்­க­லாம் என்று தெரி வித்தார். சம்­பள மன்­றத்­தில் முத­லா­ளி­கள், தொழிற்­சங்­கங்­கள், அர­சாங்­கப் பிர­தி­நி­தி­கள் என 22 உறுப்­பி­னர்­கள் இக்குழுவில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!