வரி வசூல் கூடியது; நடப்பு நிதியாண்டில் குறையக்கூடும்

2019-20 நிதியாண்டில் $53.5 பி.; நடப்பு ஆண்டில் 10% வரை குறையலாம் என கணிக்கப்படுகிறது...

சிங்­கப் ­பூ­ரில் கடந்த நிதி ஆண்­டில் நிறு­வ­னங்­களும் தனிப் ­பட்­ட­வர்­களும் அர­சாங்­கத்­ திற்கு அதிக வரி­யைச் செலுத்­தி­னார்­கள். இருந்­தா­லும் கொவிட்-19 தொற்று கார­ண­மாக நடப்பு நிதி­யாண்­டில் வரி­வ­சூல் குறை­யக்­கூடும் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் 2019-2020 நிதி ஆண்­டில் $53.5 பில்­லி­யன் வரி வசூ­லித்­த­தா­க­வும் இது அதற்கு முந்தைய ஓராண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2.1 விழுக்­காடு அதி­கம் என்­றும் ஆணை­யத்­தின் வரு­டாந்­திர அறிக்கை தெரி­விக்­கிறது. அர­சாங்க நடை­மு­றைச் செல­வில் 72 விழுக்­காட்டை இந்த வரி வசூல் ஈடு­செய்­கிறது. சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் இது 10.5 விழுக்­காட்­டிற்­குச் சமம்.

இத­னி­டையே, இந்த நிதி ஆண்டில் மொத்த வரி வசூல் ஏறக்­குறைய 10% குறை­யக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மேபேங்க் கிம் எங் மூத்த பொரு­ளி­யல் வல்­லு­நர் சுவா ஹாக் பின் தெரி­வித்து இருக்­கி­றார். பொரு­ளி­யல் இறங்­கு­மு­கம் கார­ண­மாக நிறு­வ­னங்­கள் செலுத்­தும் வரு­மான வரி வசூ­லும் ஜிஎஸ்டி வரி வசூ­லும் குறை­யும்.

முத்­திரை தீர்வை அந்த அள­வுக்­குக் குறை­யாது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். சிங்­கப்­பூர் தன்­னு­டைய பொரு­ளி­யல் -5 விழுக்­காடு முதல் -7 விழுக்­காடு வரை குறை­யக்­கூ­டும் என்று முன்­னு­ரைத்து இருக்­கிறது. ஏறக்­கு­றைய 20 ஆண்­டு­களில் இந்த அள­வுக்­குப் பொரு­ளி­யல் படு­மோ­ச­மாக இருந்­த­தில்லை.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வியா­ழக்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூல், தொடக்க மதிப்­பீட்­டை­விட 14% குறை­யும் என்று கணக்­கி­டப்­பட்டு இருப்­ப­தா­கக் கூறினார். பய­ணங்­கள் தடை­பட்டு இருப்­பதும் கொவிட்-19 கார­ண­மாக அமல்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­களும் இதற்­குக் கார­ணம். மேலும் சில ஆண்­டு­க­ளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் வழக்­கத்­தை­விட குறை­வாகவே இருந்து வரும் என்­றும் தெரி­கிறது.

சிங்­கப்­பூ­ரில் அர­சாங்­கத்­திற்­குச் சேரும் வரி­யில் வரு­மான வரியே அதி­கம். இந்த வரி, மார்ச் 31ல் முடி­வுற்ற 12 மாத காலத்­தில் $30.8 பில்­லி­ய­னாக இருந்­தது. இந்த வரி­யில் நிறு­வ­னங்­கள் செலுத்­தும் தொகை­யும் தனி­ந­பர்­கள் செலுத்­தும் தொகை­யும் அடங்­கும். ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் நிறு­வ­னங்­கள் செலுத்­திய வரி 4.3 விழுக்­காடு கூடி $16.7 பில்­லி­ய­னாக இருந்­தது. தனி­ந­பர் வரி வசூல் 5.7 விழுக்­காடு கூடி $12.4 பில்­லி­ய­னா­கி­யது. அடுத்த படியாக ஜிஎஸ்டி மூலம் அரசாங்கத்திற்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மொத்த வரி வசூலில் 21% ஜிஎஸ்டி வரி. இது 0.2% கூடி $11.2 பில்லியனாக ஆகி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!