தாய்மொழி ஆதரவுத் திட்டம் மேலும் பல தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம்

தாய்­மொ­ழிக் கற்றலில் சிர­மம் எதிர்­நோக்­கும் தொடக்­கப் பள்ளி மாணவர்களுக்குக் கூடு­தல் உதவி வழங்கப்படுகிறது. அவர்­க­ளுக்­கான பாடங்­களில் கூடு­தல் விளை­யாட்டு நட­வ­டிக்­கை­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தப் புதிய தாய்­மொழி ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ், தொடக்­க­நிலை 3 மற்­றும் 4 மாண­வர்­கள் சிறிய குழுக்­களாகப் பிரிக்­கப்­பட்டு கல்வி அமைச்சு தயா­ரித்­துள்ள வளங்­களைக் கொண்டு அவர்­க­ளுக்­குப் பாடம் கற்­பிக்­கப்­ப­டு­கிறது. ஒவ்­வொரு குழு­வில் ஐந்து முதல் 12 மாண­வர்­கள் வரை இடம்­பெறு­கின்­ற­னர்.

2018ஆம் ஆண்­டில் தொடக்­க­நிலை 3 மாண­வர்­க­ளுக்­காக முன்­னோட்ட அடிப்­ப­டை­யில் இந்­தத் திட்­டத்தை கல்வி அமைச்சு தொடங்­கி­யது. சீன மொழிக்­காக 14 பள்­ளி­களும் மலாய் மற்­றும் தமிழ்­மொழிக்­காக தலா ஐந்து பள்ளி­களும் இந்த முன்­னோட்­டத் திட்­ட­தில் பங்­கேற்­றன.

அதை­ய­டுத்து இத்­திட்­டம் கூடு­த­லான தொடக்­கப் பள்­ளி­களுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளது. தற்­போது தொடக்­க­நிலை 3 மாண­வர்­க­ளுக்­காக 157 பள்ளி­களும் தொடக்­க­நிலை 4 மாண­வர்­க­ளுக்­காக 52 பள்ளி­களும் இந்­தத் தாய்­மொழி ஆத­ரவுத் திட்­டத்தை வழங்­கு­கின்­றன.

மொத்­த­ம் 2,940 தொடக்­க­நிலை 3 மாண­வர்­களும் 872 தொடக்­க­நிலை 4 மாண­வர்­களும் இத்­திட்­டத்­தில் சேர்ந்­துள்­ள­னர்.

அடுத்த ஆண்­டிற்­குள் அனைத்து தொடக்­கப் பள்­ளி­க­ளி­லும் தொடக்­க­நிலை 3 மாண­வர்­க­ளுக்­காக இந்தத் திட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­படுத்­தப்­படும். 2022ஆம் ஆண்­டிற்­குள் தொடக்­க­நிலை 4 மாண­வர்­கள் அனை­வ­ரும் இத்­திட்­டத்­தின் மூலம் பல­ன­டை­வர். சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 185 தொடக்­கப் பள்­ளி­கள் உள்­ளன.

மாண­வர்­கள் தாய்­மொ­ழி­யைத் தன்­னம்­பிக்­கை­யு­டன் கற்­ப­தற்­கான உகந்த சூழலை உரு­வாக்க இந்­தத் திட்­டத்­தில் விளை­யாட்டு நட­வ­டிக்­கை­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்­சின் பாடத்­திட்ட வரைவு, மேம்­பாட்­டுப் பிரி­வின் தாய்­மொ­ழித் துறை இயக்­கு­நர் திரு­வாட்டி ஹெங் போய் ஹோங் தெரி­வித்­துள்­ளார்.

பாடங்­க­ளைப் போதிக்­கும்­போது வாய்­மொழி மற்­றும் வாசிப்புத் திறன்­களில் மாண­வர்­கள் வலு­வான அடித்­த­ளத்தை உரு­வாக்­க­வும் ஆசி­ரி­யர்­கள் உத­வு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மாண­வர்­க­ளின் தேவை­கள், அட்­ட­வணை ஏற்­பா­டு­க­ளைப் பொறுத்து, பாடத்­திட்ட நேரத்­திலோ அதற்கு வெளி­யிலோ பள்­ளி­கள் தாய்­மொழி ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் பாடங்­க­ளைக் கற்­பிக்­க­லாம்.

செயின்ட் ஆன்­டனி தொடக்கப் பள்­ளி­யில் கடந்த ஆண்டு இத்­திட்­டத்­தில் சேர்ந்து பல­ன­டைந்த மாண­வர்­களில் ஒரு­வர் தொடக்­க­நிலை 4ல் பயி­லும் ஸ்ரீராம் கோபிதா.

தமி­ழில் வாசிப்­ப­தி­லும் எழு­து­வ­தி­லும் இவர் முன்­னேற்­றம் அடைந்திருப்­ப­தாக இவ­ரது தாயார் திரு­மதி ஸ்ரீராம் ரேகா, 39, கூறி­னார்.

“இதற்கு முன்­ன­தாக கோபி­தா­வுக்கு தமிழ் எழுத்­து­களை அடை­யா­ளம் காண தெரி­யாது. ஆனால், இப்­போது குறை­வான எழுத்­துப்­பி­ழை­க­ளு­டன் அவர் எழு­து­வ­து­டன் அவ­ரது சொல் வள­மும் மேம்­பட்­டுள்­ளது,” என்­றார் இல்­லத்­த­ர­சி­யான திரு­மதி ரேகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!