பெரிய விடுதிகளில் சோதனை கிருமிப் பரவலைத் தடுக்க புதிய திட்டம்

கொவிட்-19 கிரு­மிப் ­ப­ர­வல் ஏற்­ப­டா­மல் தடுக்­கும் நட வ­டிக்­கை­யாக அனைத்து வெளி ­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி ­க­ளி­லும் புதிய, பரந்த அள­வி­லான தொற்று தடுப்பு, கட்­டுப் ­பாட்டு (ஐபிசி) திட்­டத்தை மனிதவள அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தத் திட்­டம் தங்­கு­மிட நிர்­வா­கி ­க­ளுக்­கும் குடி­யி­ருப்­பா­ளர ­க­ளுக்­கும் தெளி­வான பொறுப்­பு­களை வழங்­கு ­வ­தோடு, கல்­வி யை­யும் பயிற்­சி­யை­யும் வழங்­கும். இத­னால் அவர்­கள் ஒவ்­வொ­ரு ­வ­ரும் தங்­கள் பங்கை ஆற்ற முடி­யும்.

இதன் ஒரு பகு­தி­யாக ஊழி­யர்­கள் சுகா­தார விதி­மு­றை­கள் குறித்து சுய­மாக இணை­யத்­தில் கற்­றுக்­கொள்­வர்.

உண­வுக்கு முன் சோப்புப் போட்டு கைகளைக் கழு­வு­தல், முறை­யான முகக்­க­வச பயன்­பாடு, பேசும்­போது முகத்­தைத் தொடா­மல் இருப்­பது, குழுக்­களை ஐந்­துக்­கும் குறை­வா­ன­வர்­க­ளாக வைத்­தி­ருத்­தல் ஆகி­யவை சுகா­தார விதி­களில் அடங்­கும் என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கையில் விளக்­கி­யது. இவை முறை­யா­கப் பின்­பற்­றப்­ப­டு­வதை உறு­தி ­செய்ய, பெரிய தங்­கு­ம் விடு­தி­களில் ஒவ்­வொரு வார­மும் சோதனையிடப்­படும்.

கிரு­மித்­தொற்று தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்­டுத் திட்­டம் தீவு முழு­வ­தும் உள்ள அனைத்­துத் தங்­கும் விடு­தி­க­ளி­லும் அமல்­ப­டுத்­தப்­படும் என்று கூறிய மனி­த­வள அமைச்சு, எதிர்­கா­லத்­தில் கிரு­மி பரவாமல் தடுப்பதே இதன் நோக்­கம் என்று குறிப்­பிட்­டது.

மனி­த­வள அமைச்­சின் ‘ஏஸ்’ எனும் நம்­பிக்கை, பரா­ம­ரிப்பு மற்­றும் ஈடு­பாட்­டுக் குழு, சுகா­தார அமைச்சு, மளி­த­வள அமைச்­சின் ஃபாஸ்ட் எனும் நம்­பிக்கை, ஆத­ர­வுக் குழுக்­கள் புதிய திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளன.

சுமார் 500 பெரிய தங்­கும் விடு­தி­கள் குறைந்­தது வாரத்­திற்கு ஒரு முறை­யா­வது சோதனை செய்­யப்­படும். வழக்­க­மான மற்ற ஆய்­வு­க­ளின்­போது இதர தங்­கும் விடு­தி­களில் சோதனை நடத்தப் படும் என்று அமைச்சு கூறி­யது. கிரு­மித்­தொற்று தடுப்பு மற்­றும் கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்­தின் நடை­மு­றை­களை தங்­கும் விடுதி நடத்­து­நர்­கள், ஊழி­யர்­கள், விடு­தி­யில் தங்­கி­யி­ருப்­போர் புரிந்­து­கொள்ள பயிற்­சி­கள் வழங்­கப்­படும்.

இதற்­கான காணொளி, வரை­ப­டங்­கள் உள்­ளிட்ட கற்­றல் சாத­னங்­கள் தற்­போது ஊழி­யர்­கள் உடல் வெப்­ப­நி­லையை பதிவு செய்­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் ‘FWMOMCare’ செய­லி­யில் இடம்­பெற்­றுள்­ளன.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்துவ­தில் சரி­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டதை உறுதி செய்ய சோதனைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ‘ஏஸ்’ குழு­மத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் லாம் மெங் சோன் தெரி­வித்­தார்.

சோதனைகளில் மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் மற்­றும் தொற்­று­நோய் நிர்­வா­கம் பற்றி அறிந்த தாதி­யர் உட்­பட நூற்­றுக்­கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். குறிப்­பிட்ட தங்­கும் விடுதி அல்­லது ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான தடுப்பு நட­வ­டிக்­கை­களை வடி­வ­மைப்­ப­தில் தாதி­யர்கள் உத­வி­யாக இருப்­பார்­கள் என்று திரு லாம் கூறி­னார்.

புதிய திட்­டத்­தைப் பற்­றிய பயிற்­சி­கள் ஊழி­யர்­க­ளுக்கு கட்­டா­ய­மல்ல. ஆனால் தங்­கும் விடுதி நடத்­து­நர் அவற்றை ஊழி­யர்­கள் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விக்­க­லாம் என்­றார். மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் விடு­தி­க­ளுக்­குச் சென்ற போது ஊழி­யர்­கள் பலர் முகக்­க­வ­சத்தை அரை­கு­றை­யாக அணிந் திருந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அப்­ப­டிப்­பட்ட ஊழி­யர்­க­ளி­டம் முகக்­க­வ­சத்தை அணிய வேண்­டும் என்று சொல்­வ­தற்­குப் பதி­லாக சுவா­சத் துளி­கள் மூலம் கிரு­மிப் பர­வு­வதை அவர்­க­ளுக்கு விளக்­க­லாம்.

புதிய திட்­டம், பாது­காப்­பான வாழ்க்கை முறைக்கு மாற்­றாக அமை­யாது.இருந்தாலும் கிரு­மிப்­ ப­ர­வ­லைத் தடுப்­ப­தில் முன்­னிலை அர­ணா­கச் செயல்­படும் என்று டாக்­டர் லாம் குறிப்­பிட்­டார்.

புதிய திட்­டம் பற்­றிய பயிற்சி சாத­னங்­கள், வெளி­நாட்டு ஊழி யர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் பயன்­ப­டுத்­தும் வகை­யில் தமிழ், சீனம், வங்காளம், ஆங்­கி­லம் ஆகிய நான்கு மொழி­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.புதிய திட்­டம் பற்றி தமிழ் முர­சி­டம் கருத்து கூறிய ‘சுங்கை தெங்கா லாட்ஜ்’ தங்­கும் விடுதி ஊழி­ய­ரான திரு பிரம்­ம­தே­வன் செல்­லையா, 33, “பாது­காப்பு விதி முறை­க­ளுக்கு இணங்க தங்­கும் விடு­தி­கள் செயல்­பட்­டா­லும் சில அம்­சங்­களில் மேம்படுத்த இடம் உள்­ளது,” என்­றார்.

“விடு­தி­களில் உள்ள கடை­கள், சிற்­றுண்­டிச் சாலை­க­ளுக்கு கூட்டமாக போகும் ஊழி­யர்­களை மேலும் பாது­காப்­பாக நிர்­வ­கிக்க லாம். பயிற்­சித் திட்­டங்­க­ளு­டன் நிறுத்­தி­வி­டா­மல் தின­சரி நடை முறை­யில் பாது­காப்பு இருப்­ப­தை­யும் அர­சாங்­கம் உறுதி செய்ய வேண்­டும்,” என்று அவர் கூறி னார்.

எம்­இ­எஸ் குழு­மத்­தில் செயல் முறைக்­கான துணை இயக்­கு­நர் திரு முகம்­மது சாதிக், “நம் தங்­கும் விடு­தி­களில் வாழ்­வ­தற்­கான பய­னுள்ள பாது­காப்புத் திட்­டங்­களை குடி­யி­ருப்­பா­ளர்களுக்கு உடன்­பா­டு­டன் செயல்படுத்த ‘ஐபிசி’ திட்­டம் வழி வகுக்­கிறது. கட்­டுப்­பா­டு­கள் குறித்த விவ­ரங் களைப் பகிர பல உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கி­றோம். முறை­யான சுகா­தா­ரத்தை எப்­படி செயல்­ப­டுத்­து­வது, கிருமி நீக்­கத்­திற்­கான வழி­கள், கட்­டு­ப்பா­டு­க­ளைக் கடைப்பிடிப்­ப­தற்­கான தின­சரி நினை­வூட்­டல் போன்­ற­வற்றை வெளி­நாட்டு ஊழி­யர்களுக்­குக் கற்­பிக்­கி­றோம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!