பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற சில விவகாரங்களைப் பற்றி சிங்கப்பூரிலுள்ள மாணவர்கள் அதிகம் தெரிந்துள்ளனர். ஆயினும், அவர்கள், அனைத்துலக பூசல்கள் போன்ற வேறு சில தலைப்புகள் பற்றி நன்கு அறிந்திருப்பதில்லை.
உலக பருவநிலை மாற்றம் குறித்த விவகாரங்களைப் பற்றி தங்களால் நன்கு விளக்கம் அளிக்க முடியும் என்று பத்து மாணவர்களில் எட்டுப் பேர் தெரிவித்தனர். கரியமில வாயுவின் வெளியீட்டால் ஏற்பட்டுள்ள தாக்கம், பிற நாடுகளைக் காட்டிலும் ஏன் சில நாடுகள் அதிகம் பாதிப்படைகின்றன உள்ளிட்டவற்றை அவர்களால் விவரிக்க முடிகிறது. இந்த எண்ணிக்கை, பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு (OECD) நாடுகளின் சராசரி எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.
அனைத்துலக பூசல்கள் குறித்து ஓரளவு தெரியும் என்றும் அவற்றைப் பற்றி ஓரளவுக்குப் பேச முடியும் என்றும் சிங்கப்பூர் மாணவர்களில் 66 விழுக்காட்டினர் தெரிவித்தனர். உலக சுகாதாரம் மற்றும் சத்துணவு குறைபாடு குறித்து அறிந்திருப்பதாக 70 விழுக்காட்டுக்கு அதிகமானோர் தெரிவித்தனர். ஆயினும் உலக பொருளியல் குறித்து அவர்களுக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியவில்லை.
இது குறித்து கருத்துரைத்த கல்வியமைச்சு, "அறிவியல், நிலவியல், சமூகவியல் போன்ற பாடங்களின் மூலம் பருவநிலை மாற்றம், இன மதவாத பூசல் உள்ளிட்ட தலைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை எங்களது மாணவர்கள் பெறுகின்றனர்,"
மாணவர்களை சரிபார்க்க உலக விவகாரங்களையும் அதன் பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் மற்றும் கலாசாரங்களையும் பற்றிய புரிதலை ஆழப்படுத்த ஊக்குவிப்பதாக அமைச்சு கூறியது.

