வெளிநாட்டினர் இனி இந்தியா செல்லலாம்; ஓசிஐ, பிஐஓ அட்டைதாரர்களுக்கு அனுமதி

இந்­தி ­யா­வைப் பூர்வீ ­க­மா­கக் கொண்ட ஓசிஐ, பிஐஓ அட்­டை­ தா­ரர்­களும் பிற வெளி­ நாட்­டி­ன­ரும் எந்­தக் கார­ணத்­ திற்­கா­க­வும் இந்­தியா சென்று வர அனு­ம­திக்­கும் வகை­யில் அந்­நாடு விசா கட்­டுப் ­பா­டு­க­ளைத் தளர்த்தி இருக்­கிறது.

ஆயி­னும், சுற்­றுலா விசாக்­களில் இந்­தியா செல்­லத் தடை நீடிக்­கிறது. கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் இந்­தியா செல்ல முயல்­வோர் இந்த அறி­விப்­பால் பெரும் நிம்­மதி அடைந்­துள்­ள­னர்.

“இந்­தி­யா­விற்கு வரு­கை­தர அல்­லது இங்­கி­ருந்து கிளம்ப விரும்­பும் வெளி­நாட்­டி­னர் மற்­றும் இந்­தி­ய­ருக்­கான விசா, பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் தளர்த்த இந்­திய அர­சாங்­கம் முடிவு­செய்­துள்­ளது. அந்த வகை­யில், சுற்­றுலா தவிர்த்த பிற கார­ணங்­களுக்­காக ஓசிஐ, பிஐஓ அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் மற்ற வெளி­நாட்­ட­வர்­களும் இந்­தி­யா­விற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்,” என்று இந்­திய உள்­துறை அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அதே வேளை­யில், தனி­மைப்­படுத்­தல், வேறு சுகா­தார, கொவிட் -19 விவ­கா­ரங்­கள் தொடர்­பில் இந்திய சுகா­தார, குடும்ப நல்­வாழ்வு அமைச்சு வெளி­யிட்டு இருக்­கும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பய­ணி­கள் அனை­வ­ரும் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், மின்­னணு, சுற்­றுலா, மருத்­துவ விசாக்­கள் தவிர்த்து மற்ற அனைத்து விசாக்­கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் நீக்­கப்­பட்டு, அவை செல்­லத்­தக்­க­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

“அத்­த­கைய விசாக்­கள் காலா­வ­தி­யா­கி­விட்­டால், இந்­தி­யத் தூத­ர­கங்­களில் இருந்து புதிய விசாக்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். மருத்­து­வச் சிகிச்சை பெறு­வ­தற்­காக இந்­தியா வர விரும்­பும் வெளி­நாட்­டி­னர், தங்­க­ளு­டன் வரு­வோ­ருக்­கும் சேர்த்து மருத்­துவ விசா கோரி விண்­ணப்­பிக்­க­லாம். இதை­ய­டுத்து, தொழில், கருத்­த­ரங்­கு­கள், வேலை, கல்வி, ஆய்வு, மருத்­து­வம் போன்ற கார­ணங்­க­ளுக்­காக வெளி­நாட்­டி­னர் இந்­தியா வந்து செல்ல முடி­யும்,” என்று அமைச்­சின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

கொரோனா நோய்ப் பர­வல் கார­ண­மாக, இவ்­வாண்டு பிப்­ர­வரி­யில் இருந்து அனைத்­து­ல­கப் பய­ணி­கள் இந்­தி­யா­விற்கு வந்து செல்­வ­தைத் தடுக்­கும் வித­மாக இந்­திய அர­சாங்­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!