தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவிலும் ரயில், பேருந்துகளிலும் அழகு மயில் பவனிவரும் அலங்காரம்

1 mins read
cb0b081a-290c-4563-b9ed-b9fadfcd5597
அலங்­கா­ரங்­க­ளைப் பாராட்­டிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், பல இன சிங்­கப்­பூர் சூழ­லில் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் பாரம்­ப­ரி­யம், கலா­சா­ரம், விழாக்­கள் குறித்து அதி­கம் அறிந்­தி­ராத பட்­சத்­தில் அவற்­றைப் பற்றி தெரிந்­து­கொள்ள முன்­வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3

தீபா­வளி பண்­டிகை உணர்­வைப் பிரதிபலிக்கும் வகை­யில் குறிப்­பிட்ட சில எம்­ஆர்டி ரயில்­களும் பேருந்­து­களும் வண்­ண­மிகு தீபா­வளி அல­கா­ரங்­க­ளைக் கொண்டு வலம் வர­வுள்­ளன.

ஒரு மாத காலத்­திற்கு லிட்­டில் இந்­தியா ரயில் நிலை­யம், பூன் லே பேருந்து நிலை­யம் ஆகி­யவை 'மயில்' கருப்­பொ­ருள் கொண்ட அலங்­கா­ரங்­க­ளு­டன் காட்­சி­ய­ளிக்­கும்.

மொத்­தம் நான்கு ரயில்­க­ளி­லும் 10 பேருந்­துச் சேவை­க­ளி­லும் இந்த அலங்­கா­ரங்­கள் இடம்­பெ­றும்.

கடந்த ஐந்து ஆண்­டுக­ளா­கவே நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­க­மும் (லி‌‌‌ஷா) இணைந்து இம்­மு­யற்­சிக்கு ஏற்­பாடு செய்து வரு­கின்­றன.

"தீபா­வளி பண்­டிகை லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தை­யும் தாண்டி மற்ற பகு­தி­களில் அன்­றா­டம் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணிக்­கும் மக்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்ற நோக்­கத்­தில் அலங்­கா­ரங்­க­ளைப் பல சேவை­களில் விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளோம்," என்று தெரி­வித்­தார் லி‌‌‌ஷா­வின் தலை­வர் திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

அலங்­கா­ரங்­க­ளைப் பாராட்­டிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், பல இன சிங்­கப்­பூர் சூழ­லில் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் பாரம்­ப­ரி­யம், கலா­சா­ரம், விழாக்­கள் குறித்து அதி­கம் அறிந்­தி­ராத பட்­சத்­தில் அவற்­றைப் பற்றி தெரிந்­து­கொள்ள முன்­வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.