லாரியால் மோதப்பட்ட சைக்கிளோட்டி உயிரிழந்தார்

1 mins read
937335ea-f401-4007-96dd-6c47a3b8bb26
-

சைக்கிளை லாரி மோதிய விபத்தில் சம்பந்தப்பட்ட 48 வயது சைக்கிளோட்டி கடுமையாக காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நியூ அப்பர் சாங்கி ரோட்டுக்கும் பிடோக் நார்த்துக்கும் இடையிலான சாலை சந்திப்பில் இந்தச் சம்பவம் நேர்ந்தது.

லாரியின் ஓட்டுநர், இன்று காலை 11.42 மணிக்கு நடந்த விபத்தின்போது நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தனது லாரியை ஓட்டிச் சென்றார்.

சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த ஆடவர், பின்னர் இறந்தார்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 67 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.