விவியன்: ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளைப் பெற்றுக்கொள்ள அவசரம் வேண்டாம்

தொடர்புகளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­யும் 'டிரேஸ் டுகெதர்' கரு­வி­க­ளைப் பெற்­றுக்­ கொள்­வ­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் அவ­ச­ரப்­பட வேண்­டி­ய­தில்லை என்று அறி­வார்ந்த தேசம் திட்­டத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

தற்­போது 38 சமூக நிலை­யங்­களில் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். அடுத்த மாத இறு­திக்­குள் தீவு முழு­வ­தும் உள்ள 108 சமூக நிலை­யங்­களில் பொது­மக்­கள் அவற்­றைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தாங்­கள் வசிக்­கும் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்கு அரு­கில் உள்ள சமூக மன்­றங்­களில் கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் அறி­வுறுத்­தி­யுள்­ளார்.

அந்­தந்த சமூக மன்­றங்­களில் விநி­யோ­கம் எப்­போது தொடங்­கு­கிறது என்­ப­தைத் தெரிந்து­கொள்ள Token Go Where எனும் இணை­யப் பக்­கத்­தைப் பொது­மக்­கள் நாட­லாம்.

உண­வ­கங்­கள், வேலை­யி­டங்­கள், பள்­ளி­கள், கடைத்­தொ­கு­தி­கள் உள்­ளிட்ட பொது இடங்­க­ளுக்­குள் நுழைய ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செயலி அல்­லது கரு­வி­யைப் பயன்­ப­டுத்­து­வது இவ்­வாண்டு டிசம்­பர் மாத இறு­திக்­குள் கட்­டா­ய­மாக்­கப்­படும் என்று அர­சாங்­கம் அண்­மை­யில் அறி­வித்து இருந்­த­தைத் தொடர்ந்து அக்­க­ரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் ஒரு சில இடங்­களில் கடந்த வார­யி­று­தி­யில் கூட்­டம் கூடி­யது.

இந்­நி­லை­யில், போன விஸ்தா சமூக மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், போது­மான அளவு ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­கள் வழங்­கப்­படும் என்று உத்­த­ர­வா­தம் அளித்­தார்.

பொது­மக்­க­ளி­டம் ஏறத்­தாழ 2.7 மில்­லி­யன் கரு­வி­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்­பது தற்­போ­தைய இலக்கு. ஆனால், தேவை­யைப் பொறுத்து கரு­வி­க­ளின் விநி­யோக எண்­ணிக்கை சரி­செய்­யப்­ப­ட­லாம் என்று அவர் சொன்­னார்.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­கள் அறி­மு­கம் கண்­ட­போது, மூத்த குடி­மக்­க­ளி­ட­மும் திறன்­பேசி வசதி இல்­லா­தோ­ரி­ட­மும் அவற்றை விநி­யோ­கிக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

ஆனா­லும், சிங்­கப்­பூ­ரர்­கள் சிலர் செய­லி­யை­விட கரு­வி­யைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வ­தா­கக் கருத்து தெரி­வித்­துள்­ள­தால் அவர்­க­ளின் விருப்­ப­மும் கருத்­தில்­கொள்­ளப்­ப­டு­வ­தாக டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் விவ­ரித்­தார்.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ திட்­டத்­தில் மக்­க­ளின் பங்­கேற்பு முக்­கி­யம் என்­ப­தால் அவர்­க­ளின் விருப்­பத்­திற்­கேற்ற தெரிவை வழங்க நான் விழை­கி­றேன்,” என்­றார் அவர்.

தற்­போது 2.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­தா­க­வும் 400,000க்கும் அதி­க­மான கரு­வி­கள் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!