‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளை வேண்டுமென்றே சேதப்படுத்துவது சட்டவிரோதச் செயல்

'டிரேஸ்டுகெதர்' கரு­வி­க­ளைப் பயன்படுத்துவோரில் சிலர், கரு­வி­களை உடைத்­துத் திறப்பதாகவும் மின்­க­லனை அகற்­று­வ­தா­க­வும் கரு­வி­யி­லுள்ள ‘கியூ­ஆர்’ குறி­யீட்டை மாற்­று­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் இவ்­வாறு செய்­வது குற்­றம் மட்­டு­மல்ல, அது நாட்­டையே ஆபத்­தில் விட்­டு­வி­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

இணைய உரை­யா­டல் தளங்­களில் தங்­க­ளின் கரு­வி­களை மாற்றி அமைத்­த­தா­கச் சில பய­னா­ளர்­கள் பதி­விட்டு வரு­வ­தைத் தாங்­கள் அறிந்­தி­ருப்­ப­தாக அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­மப் பேச்­சா­ளர் ஒரு­வர் ‘தி நியூ பேப்­பர்’ செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.

“கரு­வியை வேண்­டு­மென்றே சேதப்­படுத்­தும் அல்­லது குறும்­புச் செய­லில் ஈடு­ப­டு­வது கணி­னி­யின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான சட்­டத்­தின் கீழ் சட்­ட­வி­ரோ­த­மா­கும்,” என்­றார் அவர்.

கரு­வி­களை விநி­யோ­கம் செய்­யத் தொடங்­கி­யது முதல் இது­வரை 400,000க்கும் மேற்­பட்­டவை மக்­க­ளின் கைக­ளைச் சென்­ற­டைந்­து­விட்­டன. தொடர்­பு­க­ளின் தடங்­களை அறி­யும் பணி­யைத் துரி­தப்­ப­டுத்­தி­யுள்ள இக்­க­ரு­வி­கள், மாற்றி அமைக்­கப்­பட்­டால் பலன் அளிக்­கா­மல் போக­லாம் என்­றார் பேச்­சா­ளர்.

கரு­வி­களை எவ்­வாறு மாற்றி அமைக்­க­லாம் என்ற உரை­யா­டல், ‘ஹார்ட்­வேர்­ஸோன்’ தளத்­தில் சென்ற செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்­தி­ருந்­தது. கருத்­து­கள் பதி­விட்ட பலர், கரு­வி­க­ளின் பயன்­பாட்டை எதிர்ப்­ப­தா­கத் தெரிந்­தது.

மக்­க­ளின் நட­மாட்­டம், கண்­கா­ணிப்பு ஆகி­ய­வற்­றுக்­குக் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று சிலர் அக்­கறை தெரி­விக்க, தொடர்­பு­க­ளின் தட­ம­றி­வ­தற்கு மட்­டுமே கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று அர­சாங்­கம் உறு­தி­ய­ளித்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஒரு­வ­ருக்கு இருப்­பது உறு­தி­யா­கும்­வரை தர­வு­க­ளைச் சேக­ரிக்­கும் கருவி, 25 நாட்­க­ளுக்­குப் பின் சேர்த்த தர­வு­கள் அனைத்­தை­யும் தானாக வெளி­யேற்­றி­விடும் என்று பகுப்­பாய்வு நிறு­வ­னம் ஒன்­றைச் சேர்ந்த ஒரு நிபு­ணர் தெரி­வித்­தார்.

கரு­வி­யைச் சேதப்­ப­டுத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஈராண்டு வரை சிறை, அப­ரா­தம் அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம் என்று வழக்­க­றி­ஞர் ஒரு­வ­ரும் கூறி­னார்.

கரு­வி­யில் மாற்­றம் செய்­வோர் பொறுப்­பற்று நடந்­து­கொள்­வ­தா­க­வும் பிறரை அபா­யத்­தில் விடு­வ­தா­க­வும் தொற்று நோய் நிபு­ணர் லியோங் ஹோ நாம் கூறி­னார்.

“கரு­வி­யைச் சேதப்­ப­டுத்­து­வது நம் நாட்­டைச் சீர­ழிப்­ப­தற்­குச் சமம். ஏன் இந்த சிந்­த­னை­யற்ற செய­லில் ஈடு­ப­டு­கி­றார்­கள்?” என்­றார் அவர்.

நாளை­மு­தல் படிப்­ப­டி­யாக டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களின் விநியோகம் தொடங்கும்

இங்­குள்ள 38 சமூக மன்­றங்­களில் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­க­ளின் விநி­யோ­கம் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. நாளை முதல் மார்­சி­லிங் சமூக மன்­றத்­தில் கரு­வி­க­ளின் விநி­யோ­கம் தொடங்கி, படிப்­ப­டி­யாக ஒவ்­வொரு குழுத்­தொ­கு­தி­யா­கக் கரு­வி­க­ளின் விநி­யோ­கப் பணி தொட­ரும். குறிப்­பிட்ட சில சமூக மன்­றங்­களில் நீண்ட வரிசை உரு­வா­வ­தைத் தவிர்க்க இது செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

டிசம்­பர் பிற்­பா­திக்­குள் அனைத்து சமூக மன்­றங்­களும் கரு­வி­க­ளின் விநி­யோ­கத்­திற்­காக திறந்­தி­ருக்­கும் என்று அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

அவ­ர­வர் குழுத்­தொ­கு­தி­யின் சமூக மன்­றங்­க­ளி­லி­ருந்து மட்­டுமே பொது­மக்­கள் தங்­க­ளின் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கரு­வி­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அலு­வ­ல­கம் நேற்று முன்­தி­னம் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது.

கருவி தேவைப்­ப­டு­வோர் அதைப் பெற்­றுக்­கொள்­ளும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட பின்­னரே, ‘டிரேஸ்­டு­கெ­தர்’ கருவி அல்­லது செய­லி­யைக் கொண்டு வரு­கைப் பதிவை உறுதி செய்­யும் ‘சேஃப்எண்ட்ரி’ முறை அமல்­ப­டுத்­தப்­படும் என்­றது அலு­வ­ல­கம்.

தொடர்­பு­க­ளின் தட­ம­றி­வதை இரு வழி­க­ளி­லும் பதிவு செய்ய இய­லும் என்­ப­தால் மக்­கள் செய­லியை அல்­லது கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!