150 கிலோமீட்டர் நீள கம்பிவடங்கள் மாற்றம்; ஒரே நேரத்தில் 3 எம்ஆர்டி தடங்களில் சேவைத்தடை எதிரொலி

துவாஸ் வெஸ்ட் நீட்­டிப்­புத் தடத்­தில் 150 கிலோ­மீட்­டர் நீள மின்கம்பிவடங்கள் முழுவதும் மாற்றப்பட உள்ளன.

இம்­மா­தம் 14ஆம் தேதி மூன்று வெவ்­வேறு தடங்­களில் ஒரே நேரத்­தில் நிகழ்ந்த சேவைத்­த­டை­யால் 6,700க்கு மேற்­பட்ட பய­ணி­கள் ஏறக்­கு­றைய மூன்று மணி நேரம் ரயில்­க­ளி­லேயே சிக்­கிக்­கொண்­டதை அடுத்து இந்­ந­ட­வடிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது.

ரயில்­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்­கும் 150 கி.மீ. நீள கம்­பி­வ­டங்­களை அடுத்த ஆண்டு இறு­திக்­குள் ஒப்பந்ததாரரான பிரான்சின் ஆல்ஸ்டம் நிறு­வ­னம் மாற்­றும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அவ்­வாறு மாற்­றப்­படும் கம்­பி­வ­டங்­கள் மிகுந்த மின்­காப்­புத்­தி­ற­னைக் கொண்­டி­ருக்­கும் என்று ஆல்ஸ்டம் நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

அத்­து­டன், துவாஸ் வெஸ்ட் நீட்­டிப்­பில் அமைந்­துள்ள மின்­சுற்­றுத் தகர்ப்­பான்­களில் 113 திறப்­புச் சுருள்­களை இவ்­வாண்டு இறு­திக்­குள் அந்­த நி­று­வனம் மாற்­றும் எனத் தெரி­விக்­கப்­பட்டது.

ஆல்ஸ்டம் நிறு­வ­னம் தனது சொந்த செல­வில் அப்­ப­ணி­களை மேற்­கொள்­ளும் எனக் கூறப்பட்டது.

கடந்த 14ஆம் தேதி மாலை உச்ச நேரத்­தில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வட்ட ரயில் பாதை­களில் நிகழ்ந்த சேவைத் தடை­யால் மொத்­தம் 123,000 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

கிழக்கு-மேற்கு ரயில் பாதை­யில் 2017ஆம் ஆண்­டில் துவாஸ் வெஸ்ட் நீட்­டிப்பு திறக்­கப்­பட்ட பிறகு இது­போன்ற நான்கு கம்­பி­வ­டப் பழு­துச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது, மின்­சுற்­றுத் தகர்ப்­பான்­கள் முறை­யாக வேலை செய்­த­தால் பெரி­ய­ள­வில் சேவைத் தடை நிக­ழ­வில்லை.

இதை­ய­டுத்து, பழு­தான கம்­பி­வ­டங்­கள் குறித்து இவ்­வாண்டு ஜனவரி­ மாதத்தில் ஆல்ஸ்டம் நிறு­வ­னத்­தி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­நி­று­வ­ன­மும் மேல­டுக்­குக் கம்பி­வ­டங்­களை மாற்­றித் தரு­வ­தாக ஒப்­புக்­கொண்­டது. இம்­மா­தத்­தில் இருந்து கம்­பி­வ­டத்தை மாற்­றும் பணி­கள் தொடங்­க­வி­ருந்­தன.

மூன்று தட சேவைத் தடைக்கு ஒரு வாரம் முன்­பா­கத்­தான், அதா­வது இம்­மா­தம் 6ஆம் தேதி துவாஸ் வெஸ்ட் நீட்­டிப்­பில் உள்ள மின்­சுற்­றுத் தகர்ப்­பான்­க­ளின் திறப்­புச் சுருள்­கள் சரி­யாக உள்­ள­னவா எனச் சோதிக்­கப்­பட்­டன என்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி நியோ கியன் ஹோங் தெரி­வித்­தார்.

திறப்­புச் சுருள்­களை மாற்­று­வ­தற்கு ஏது­வாக அடுத்த மாதத்­தில் இருந்து வார­யி­று­தி­களில் சம்­பந்­தப்­பட்ட ரயில் நிலை­யங்­கள் முன்­ன­தா­கவே மூடப்­பட்டு, தாம­த­மா­கத் திறக்­கப்­படும் என்று திரு நியோ கூறி­னார்.

அடுத்த ஆண்­டில் கம்­பி­வ­டம் மாற்­றும் பணி­கள் இடம்­பெ­றும்­போது குறிப்­பிட்ட ரயில் நிலை­யங்­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முழு­வ­து­மாக மூடப்­ப­ட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தனது பங்­காக, இனி ஆறு மாதங்­களுக்கு ஒரு­முறை மின்­சுற்­றுத் தகர்ப்­பான்­க­ளைச் சோதிக்­க­வி­ருப்­ப­தாக எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது. இது­வரை ஆண்­டிற்கு ஒரு­முறை அவை சோதிக்­கப்­பட்டு வந்­தன.

இதனிடையே, இம்மாதம் 14ஆம் தேதி கம்­பி­வ­ட­மும் திறப்­புச் சுரு­ளும் செய­ல்படாமல் போன­தற்­கான கார­ணம் குறித்து இன்­னும் விசா­ரித்து வரு­வதாக நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது ஆல்ஸ்டம் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!