மூன்று மாதங்களில் 50,000 பேருக்கு வேலை கிடைத்தது; ஆட்குறைப்பு அதிகரித்தது

ஊழியரணியில் இணைந்த உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இவ்­வாண்­டின் ஜூலை முதல் செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், வேலை­யில் இருந்த உள்­ளூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட கொவிட்-19 நோய்ப் பர­வலுக்கு முன்­னி­ருந்த நிலையை எட்­டி­யது.

இருப்­பி­னும், ஊழி­யர் சந்தை அபா­ய­கட்­டத்­தில் இருந்து விடு­ப­ட­வில்லை என்றும் ஆட்­குறைப்­பும் ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­த­மும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்­தில் 2.29 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வேலை செய்­து­வந்த நிலை­யில், செப்­டம்­பர் மாதத்­தில் அந்த எண்­ணிக்கை 2.34 மில்­லி­யனாக உயர்ந்­தது என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட முதற்­கட்­டப் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது, 2020 மூன்­றாம் காலாண்­டில் ஏறக்­கு­றைய 50,000 உள்­ளூர்­வா­சி­கள் ஊழி­ய­ர­ணி­யில் இணைந்­த­னர்.

2019 டிசம்­ப­ரில் உள்­ளூர்­வா­சி­கள் 2.36 மில்­லி­யன் பேர் ஊழி­ய­ர­ணி­யில் இருந்­த­னர்.

வேலைச் சந்தை சற்று மேம்­பட்டுள்­ள­போ­தும் அது அவ்­வாறே நீடிக்­கும் எனக் கரு­து­வது அறிவுப்­பூர்­வ­மா­ன­தாக இராது என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறி­யுள்­ளார்.

“உள்­ளூர்­வா­சி­க­ளின் வேலை நில­வ­ரம் முன்­பி­ருந்த நிலையை எட்­ட­வேண்­டும் என்ற இலக்கை அடைவதற்கு நாம் கடு­மை­யாக உழைக்க வேண்­டும்,” என்­றார் அமைச்­சர் டியோ.

மொத்த வேலைவாய்ப்பு குறைந்தது, வேலை­யின்மை விகி­தம் கூடி­யது

இத­னி­டையே, வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­கள் தவிர்த்த மொத்த வேலை­வாய்ப்பு தொடர்ந்து கீழி­றங்கி வரு­கிறது. இவ்­வாண்­டின் ஜூலை-செப்­டம்­பர் மாதங்­களில் 26,900 பேர் வேலை இழந்­த­தா­க­வும் அவர்­களில் அதி­க­மா­னோர் வெளி­நாட்­டி­னர் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர்­களில் சிலர் தங்­க­ளின் தாய­கத்­திற்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தும் கடு­மை­யான வேலை அனு­ம­திக் கொள்­கை­க­ளால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரு­வது குறைந்து போன­துமே இதற்கு முக்­கிய கார­ணங்­கள் என்று திரு­வாட்டி டியோ சுட்­டி­னார்.

இதன் கார­ண­மாக உள்­ளூர்­வாசி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.

வேலை நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­கி­யி­ருப்­ப­தும் ஏப்­ரல்-ஜூன் வரை­யி­லான இரண்­டாம் காலாண்­டில் காலி­யான பணி­ இடங்­களை மீண்­டும் நிரப்பி வரு­வதும் உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு அதி­க­ரிப்­பிற்கு இன்­னொரு கார­ணம் என்­றார் அமைச்­சர்.

இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் 4.6 விழுக்­கா­டாக இருந்த உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம், அத­னை­ய­டுத்த செப்­டம்­பர் மாதத்­தில் 4.7% எனச் சற்றே கூடி­யது.

செப்­டம்­ப­ரில் உள்­ளூர்­வா­சி­கள் 112,500 பேர் வேலை­யின்றி இருந்­த­னர். அவர்­களில் 97,700 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள்.

வேலை­யில் இருக்­கும் உள்­ளூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை அதி­கரித்­துள்ள நிலை­யில், அவர்­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­த­மும் கூடி­யுள்­ளது. பணி­நீக்­கம் செய்யப் படுவது தொடரும் நிலையில், வேலை தேடு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து இருப்­பதே இதற்­குக் கார­ணம் என்று திரு­வாட்டி டியோ விளக்­க­ம­ளித்­தார்.

ஆட்­கு­றைப்பு அதி­க­ரிப்பு

இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் ஆட்­கு­றைப்­பும் அதி­க­ரித்­தது. ஏப்­ரல்-ஜூன் கால­கட்­டத்­தில் 8,130 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட நிலை­யில், அதற்­க­டுத்த மூன்று மாதங்­களில் 9,100 பேர் அந்த நடவடிக்­கைக்கு ஆளா­கி­னர்.

2019 முதல் காலாண்டு தவிர்த்து, முந்­தைய பொரு­ளி­யல் மந்­த­நி­லை­க­ளின்­போது இருந்த ஆட்­கு­றைப்பு உச்ச அள­வைக் காட்­டி­லும் இது அதி­கம் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. 2019 முதல் காலாண்­டில் மட்­டும் 12,760 வேலை­கள் குறைக்­கப்­பட்­டன.

உற்­பத்தி, சேவைத் துறை­களில், குறிப்­பாக விமா­னப் போக்­கு­வ­ரத்து, கலை, பொழு­து­போக்கு, கேளிக்­கைத் துறை­களில் பணி­நீக்­கம் அதி­க­ரிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கிருமிப் பர­வ­லா­லும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­படுத்த வேண்டி இருப்­ப­துமே இதற்­குக் கார­ணம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, கட்­டு­மா­னப் பணி­கள் மீண்­டும் தொடங்கி இருப்­ப­தால் அத்­து­றை­யில் ஆட்­குறைப்பு நடவடிக்கை குறை­ய­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதே­போல, வரும் மாதங்­களில் வர்த்­த­கச் சூழ­லும் பொரு­ளி­யல் நிலை­யும் மேம்­ப­ட­லாம் என்­ப­தால் ஊழி­யர் எண்­ணிக்­கை­யும் ஊதி­ய­மும் குறைக்­கப்­ப­டு­வது வரும் மாதங்­களில் படிப்­ப­டி­யா­கத் தணி­யும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!