தண்ணீரை சிக்கனப்படுத்த முயலுகின்ற நிறுவனங்களுக்கு கழகம் அதிக நிதியுதவி

தண்ணீரை சிக்கனப்படுத்த முயலுகின்ற நிறுவனங்களுக்கு கழகம் அதிக நிதியுதவி

2 mins read
06087d71-20c2-40fe-998d-c97188bfee00
-

தண்­ணீ­ரைச் சிக்­க­னப் ­ப­டுத்த நிறு வனங்களுக்கு ஊக்­க­ மூட்­டும் வகையில் பொதுப் பய­னீட்­டுக் கழகம் மேலும் நிதி உதவியை வழங்க இருக்­கிறது.அந்த உதவித் தொகை­யைக் கொண்டு தண்­ணீ­ரைச் சிக்­க­னப் ­படுத்­தும் சாத­னங்­களை நிறு­வ­னங்­கள் கொள்­மு­தல் செய்­ய­லாம்.

மாதம் ஒன்­றுக்குக் குறைந்­தது 1,000 கன­மீட்­டர் அல்­லது அதற்கும் அதிக நீரை பயன்­ப­டுத்­தும் நிறு­வனங்­கள் இப்­போது $300,000 வரை நிதி­யு­தவி பெற முடி­யும்.தண்­ணீ­ரைச் சிக்­க­னப்­ ப­டுத்­தும் சாத­னத்தை நிறு­வு ­வ­தற்கு ஆகும் செல­வில் பாதி வரை நிறு­வ­னங்­கள் நிதி உதவி பெற முடி­யும் என்று அறி­விக்­கப் ­பட்டு உள்­ளது. பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் தண்­ணீர் சிக்­கன நிதி­யின்கீழ் இது கிடைக்­கும். இது ஒரு­பு­றம் இருக்க, தண்­ணீரை மறு­பு­ழக்­கத்­திற்கு விடும் திட்­டங்­களை அமல்­ப­டுத்­து­கின்ற, மாற்று தண்­ணீர் வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் திட்­டங்­க­ளைக் கொண்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு இன்­னும் அதிக நிதி­யு­தவி கிடைக்க இருக்­கிறது.

நியூ வாட்­டர் குடி­நீர், தொழிற்­சாலை தண்­ணீர் ஆகி­ய­வற்றைச் சிக்­க­னப்­ப­டுத்தி இந்­தக் கூடு­தல் உத­வியை அவை பெற­மு­டி­யும். இந்த உதவி, ஒரு திட்­டத்­திற்கு உச்­சத் தொகை­யாக $1 மில்­லி­யன் கிடைக்­கும் என்று இந்­தக் கழ­கம் நேற்று அறிக்கையில் தெரி­வித்­தது. இத்­த­கைய திட்­டங்­க­ளுக்­கும் செயல்திட்­டங்­க­ளுக்­கும் உரிய நிதி உதவி கிடைக்கும் கால­கட்­ட­மும் ஏழு ஆண்­டுகளில் இருந்து மூன்று ஆண்­டு­க­ளா­கக் குறைக்­கப்­பட்டு இருக்­கிறது. முன்­னோடித் திட்­டங்­க­ளுக்­கும் முழுத் தொகை உண்டு. திட்டச் செல­வில் பாதி வரை இது கிடைக்­கும்.

இந்­தப் புதிய நிதி ஏற்­பா­டு­கள் இன்று முதல் நடப்­புக்கு வரு­கின்­றன. இதன் மூலம் சுமார் 3,200 நிறு­வ­னங்­கள் பய­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் குடும்­பம் சாராத துறை சுமார் 55 விழுக்­காட்டு தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் இந்த அளவு 2060ல் 70 விழுக்­கா­டா­கக் கூடும் என்று கணிக்­கப்­படு­வ­தா­க­வும் கழ­கத்­தின் இணை­யத்­த­ளம் தெரி­விக்­கிறது.பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் தண்­ணீர் சிக்­கன நிதி 2007ல் தொடங்­கப்­பட்­டது. நிறு­வ­னங்­கள் தண்­ணீ­ரைச் சிக்­க­னப்­ப­டுத்­தும் திட்­டங்­களை அம­லாக்கி அதன்­மூ­லம் தண்­ணீ­ரைக் குறை­வா­கப் பயன்­ப­டுத்த ஊக்­க­மூட்­டு­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட இந்த நிதி, நிறு­வனங்­கள் மேற்­கொள்­ளும் அத்­தகைய தண்­ணீர் சிக்­கன திட்­டங்­களுக்கு மானி­யம் வழங்­கு­கிறது.

இந்­தக் கழ­கம் 350க்கும் அதிக திட்­டங்­க­ளுக்கு வழி ஏற்­ப­டுத்­திக் கொடுத்து, $24 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகையை வழங்கி இருக்­கிறது.