சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயிற்சி நிலையத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கான முன்பதிவுகள் அதிகமாக இருப்பதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 6,800க்கும் அதிகமான முன்பதிவுகள் வந்ததாக எஸ்ஏஐ இன்று தெரிவித்தது. ஒரு முன்பதிவில் ஐந்து பேருக்கு வரை பதிவு செய்யலாம்.
'இன்சைட் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' சுற்றுலாவுக்காக முன்பதிவு செய்தவர்கள், இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரயிறுதி நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் அப்பர் சாங்கியிலுள்ள பயிற்சி நிலையத்தைச் சுற்றிப்பார்க்கலாம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களை அடைவதற்காக மேற்கொண்டுள்ள மூன்று முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.
எஸ்ஐஏ ஏ380 விமானத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறியது, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பர்ஸ்ட் மற்றும் பிஸ்னஸ் வகுப்பு உணவுகளை விநியோகம் செய்தது ஆகியவை எஸ்ஐஏயின் மற்ற இரண்டு திட்டங்கள்.

