மூன்று இடங்களில் வெள்ளம்

மூன்று இடங்களில் வெள்ளம்

1 mins read
833ca2fc-34ce-4886-a1ee-ec3312f2e5f0
-

சிங்கப்பூரிலுள்ள மூன்று வட்டாரங்களில் இன்று பிற்பகல் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது.

அப்பர் பாயா லேபார் ரோடு, லோரோங் கம்பீர், மவுண்ட் வர்னன் ரோடு ஆகிய இடங்களில் இன்று மழைப்பொலிவு பலமாக இருந்தது. இந்த வட்டாரங்கள் பிற்பகல் 3 மணிக்கு பாதிப்படைந்ததாகக் கூறிய பொதுப்பயனீட்டுக் கழகம், அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.