லிட்டில் இந்தியாவில் உணவகத்தின் சமையலறைப் பகுதியில் இந்திய ஆடவர் மரணம்

லிட்டில் இந்தியாவில் உணவகத்தின் சமையலறைப் பகுதியில் இந்திய ஆடவர் மரணம்

1 mins read
73feac51-6f58-4fd1-ad0a-de0e0fc2386b
ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் அஞ்சப்பர் உணவகத்தின் பின் பகுதியில் தேடுதல் பணியில் போலிசார் ஈடுபட்டிருந்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

லிட்டில் இந்தியாவில் உணவகம் ஒன்றின் சமையலறைப் பகுதியில் இந்திய ஆடவர் ஒருவரின் சடலம் இன்று (நவம்பர் 3) காலை கண்டுபிடிக்கப் பட்டது.

இயற்கைக்கு மாறான அந்த மரணம் பற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எண் 76 ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் சமையலறைப் பகுதியில் காலை 10.30 மணியளவில், சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடலில், கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் தென்பட்டன. அவரைத் தாக்கியதற்குப் பயன்படுத்திய ஆயுதமும் சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து காலை 10.32 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

"49 வயது ஆடவர் அசைவின்றிக் கிடந்தார்; அவர் உயிரிழந்துவிட்டதாக துணை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்," என்று போலிசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குற்றச் செயல் எதுவும் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்; விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்