வீடு தேடி வந்த விழாக்கால உதவி

வீடு தேடி வந்த விழாக்கால உதவி

2 mins read
84990350-a733-4103-b743-1d444d624ba0
திருவாட்டி பார்வதியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு. (இடமிருந்து) ஐபிஆர் அறங்காவலர் ஹர்ஜித் சிங், இயோ சூ காங் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு தலைவர் திருமுருகன் பழனிவேல், ஐபிஆர் தலைவர் கௌதம் பானர்ஜி, சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன். படம்: திமத்தி டேவிட் -

விழாக்­கா­லத்தை சமூ­கத்­தில் அனை­வ­ரும் சேர்ந்து கொண்­டா­ட­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா) இந்­தி­ய வர்த்­த­கத் தலை­வர்­க­ளு­டன் இணைந்து வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு விழாக்­கால அன்­ப­ளிப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. சிண்­டா­வின் இந்­தி­ய வர்த்­த­கத் தலை­வர்­க­ளின் வட்­ட­மேசை (ஐபி­ஆர்) அமைப்­பைச் சேர்ந்த மூத்த வர்த்­த­கத் தலை­வர்­கள் வீடு வீடா­கச் சென்று பல­கா­ரங்­கள், மளி­கைப் பொருட்­கள் கொண்ட அன்­ப­ளிப்­புப் பை

களை­யும் பற்­றுச்­சீட்­டு­க­ளை­யும் வழங்­கி­னர். இந்த விநி­யோ­கம் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நேற்று வரை நடை­பெற்­றது.

சிண்­டா­வின் பங்­கா­ளித்­துவ சமூக அமைப்­பு­களில் ஒன்­றான இயோ சூ காங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வின் உத­வி­யு­டன் வசதி குறைந்த 200 குடும்­பங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

ஐபி­ஆர் அமைப்­பின் ஆலோ­ச­னைத் திட்­டத்­தின்­கீழ் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் 20 மாண­வர்­கள் அன்

­ப­ளிப்­புத் தொகுப்­பு­க­ளின் விநி­யோ­கத்­திற்­குக் கைகொ­டுத்­த­னர்.

"இந்­த பண்டிகைக் காலத்­தில் எல்­லா­ரும் கொண்­டா­ட­வேண்­டும் என்­ப­து­தான் நமது இலக்கு. வசதி ­கு­றைந்த நமது சகோ­தர சகோ­த­ரி­கள் சிர­மத்­தில் இருக்­கக்­கூ­டும். கூடவே இந்­தக் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் காலத்­தில் அவர்­கள் மேலும் க‌ஷ்­டத்­தில் இருக்­கக்­கூ­டும். அவர்­க­ளின் இல்­லங்­க­ளி­லும் உள்­ளங்­க­ளி­லும் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­து­தான் எங்­கள் நோக்­கம்," என்­றார் சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லால் வீடு வீடா­கச் சென்று விநி­யோ­கம் செய்­தது நல்ல அனு­ப­வ­மாக இருந்­த­தா­கக் கூறி­னார் ஐபி­ஆர் அமைப்­பின் தலை­வர் திரு கௌதம் பானர்ஜி.

தீபா­வ­ளியை சமூ­கத்­தில் உள்ள வசதி குறைந்­த­வர்­க­ளு­டன் குதூ­க­லமாகக் கொண்டாடி மகிழ சிண்­டா­வின் 'புரோ­ஜெக்‌ட் கிவ்' பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­கள் திட்­டம் ஒரு மாதத்­திற்கு நடை­பெ­று­கிறது. இத்­திட்­டத்­தில் சமூக அமைப்புகள், பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள், நன்­கொ­டை­யா­ளர்­கள், தனி­ந­பர்­கள் சிண்­டா­வு­டன் இணைந்து உத­வு­கின்­ற­னர்.