ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் இரண்டு பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 58,056க்கு உயர்ந்தது.
சிங்கப்பூருக்கு வெளியே இந்நோயைத் தொற்றி இவ்விருவரும் இங்கு வந்த உடனேயே வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதத்தைப் பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூக அளவிலும் ஊழியர் தங்கும் இடத்திலும் புதிய சம்பவங்கள் பதிவாகவில்லை.

