குறைந்த வருமான குடும்பங்கள் மீது அரசாங்கம் அக்கறை காட்டும்

கொவிட்-19 கிருமிப்பரவலால் தற்போது நிலவிவரும் நெருக்கடிநிலையைக் கடக்க நாட்டை வழிநடத்திச்செல்லும்போது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் இன்று (நவம்பவர் 8ஆம் தேதி) பேசிய திரு லீ, திறந்த பொருளியலை கட்டிக்காக்கும் அதே அளவில் வெளிநாட்டு பணியாளர்களால் சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் போட்டித்தன்மையை சமன் செய்வதில் இங்குள்ள தலைவர்கள் கவனம் செலுத்தியாகவேண்டும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள், அதன் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வாக்களிப்பர்.

குறைந்த ஊதிய ஊழியர்கள் அடைந்துள்ள பல்லாண்டு கால முன்னேற்றத்தை இந்தக் கிருமிப்பரவல் கெடுத்துவிடும் என்பது பெரும் கவலையாக இருப்பதாக குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூரிலுள்ள ஏற்றத்தாழ்வைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் எனத் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் நீங்கள் தொடக்கத்தில் வசதி குறைந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் கடினமாக உழைத்து முடிந்த அளவு செய்தால், உங்களது வாழ்க்கை மேம்படுவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. கொவிட்-19 கிருமிப்பரவலால் வசதி குறைந்த வீடுகள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதை நாம் முன்கூட்டியே தடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

வெறும் வார்த்தைகளாலும் அரைகுறைத் திட்டங்களாலும் இது சாத்தியப்படாது என்றும் நடைமுறைக்கு ஒத்துப்போகும் வகையில் ஆதரவு நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்றும் திரு லீ கூறினார். படிப்படியாக உயரும் சம்பள திட்டம் (Progressive Wage Model), ‘ஒர்க்ஃபேர் இன்கம் சப்ளிமண்ட்’ (Workfare Income Supplement), ‘சில்வர் சப்போர்ட்’ (Silver Support) உள்ளிட்டவற்றை இந்நடவடிக்கைகளுக்கான உதாரணங்களாகக் குறிப்பிட்டார். குறைந்த வருமானத்தைச் சம்பாதிப்போருக்கு உதவுவதற்கான புதிய வழிகளை அரசாங்கம் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் போட்டியைச் சமாளிக்க அரசாங்கம் அவர்களுக்குக் கைகொடுக்கும் என்ற ஊக்கம் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதையும் திரு லீ ஒப்புக்கொண்டார். இவ்வாறு செய்யத் தவறினால் “விரக்தியும் சமூக பதற்றநிலையும் அதிகரிக்கலாம் “ என்று அவர் கூறினார்.

ஆயினும், சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பங்களையும் பாதுகாப்பதற்கு வர்த்தகத்திற்காகவும் திறனாளர்களுக்காகவும் சிங்கப்பூர் பொருளியலைத் திறந்து வைப்பதே (check) சரி என்றார் பிரதமர்.

“பொருளியலை அடைத்துவிட்டு வேலை அட்டைதாரர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பத் தொடங்கினோமானால் சிங்கப்பூரர்களுக்கு குறைவான வேலைகளும் வாய்ப்புகளும் ஏற்படலாம். நமது குடும்பங்கள்தான் சிரமப்படும்,” என்று திரு லீ எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!