(காணொளி): ஜாலான் புக்கிட் மேராவில் கைகலப்பு

(காணொளி): ஜாலான் புக்கிட் மேராவில் கைகலப்பு

1 mins read
d083bdff-c4f2-4e06-8027-ae1e0844acde
-

ஜாலான் புக்கிட் மேராவில் இன்று காலை இரண்டு ஆடவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. புளோக் 131க்கு வெளியே காலை 9.45 மணிக்கு நடந்த இச்சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

"இவர்கள் கூச்சல் மட்டும்தான் கேட்டது. ஏன் சண்டையிட்டனர் என்பது எனக்குத் தெரியவில்லை," என்று பெயர் வெளியிடப்படாத ஒருவர் ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

காணொளியில் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருக்கும் ஒருவர், கீழே விழுந்த ஆரஞ்சு நிறச் சட்டையை அணிந்துள்ள ஆடவர் ஒருவரைக் காலால் உதைத்துக்கொண்டிருந்தார். பிறகு அந்த ஆரஞ்சு நிறச் சட்டை ஆடவர் எழுந்து அவரது எதிராளியைத் திரும்பத் தாக்கினார். இறுதியில் சிலர் அங்கு வந்து சண்டையை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.