கட்டுமானப் பணிகளுக்காக இடம் மாறும் ஜூரோங் பேருந்து நிலையம்

ஜூரோங் வட்டாரப் பாதை, ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் கட்டுமானப் பணியை முன்னிட்டு, ஜூரோங் ஈஸ்ட் பேருந்து நிலையம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.

தற்போதைய பேருந்து நிலையத்துக்கு எதிர்புறம், ஜூரோங் கேட்வே ரோடு/ ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 12 ஆகியவற்றுக்கு மற்றும் ஜூரோங் கேட்வே ரோடு/ ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் 1 ஆகிய இரு சந்திப்புகளுக்கு இடையே ஜூரோங் கேட்வே ரோட்டில் புதிய பேருந்து நிலையம் அமைகிறது.

ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2027ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் வரை இந்த புதிய இடத்தில் பேருந்து நிலையம் செயல்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (நவம்பர் 11) தெரிவித்தது.

பாதசாரிகள் பயன்பாட்டுக்காக, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் பாலம் ஒன்று ஜூரோங் கேட்வே ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கிடையே வசதியாக பயணிகள் சென்று வர இந்த ஏற்பாடு.

ஜெம் மாலுக்கு எதிரில் புதிய ஒரு பேருந்து நிறுத்தமும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்படும்.

பேருந்துச் சேவை எண்கள் 78, 79 ஆகியவை மாற்று பேருந்து நிறுத்தங்களிலிருந்து சேவையைத் தொடங்கும்.

பாதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!