லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு அபராதம்

லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு அபராதம்

1 mins read
af7b31fd-e400-4485-9767-baa3f8aabcd1
தீபா­வ­ளியை முன்­னிட்டு லிட்டில் இந்­தி­யா­வில் கூட்­டத்­தைச் சமா­ளிக்க உச்ச நேரங்­களில் கூடு­த­லான அம­லாக்க அதி­கா­ரி­களும் பாது­காப்பு இடை­வெ­ளியை உறுதி செய்­யும் தூது­வர்­களும் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த இரு வார­ இ­று­தி­களில் லிட்­டில் இந்தியாவில் பாது­காப்பு இடை­வெளி விதிமுறைகளை மீறிய எண்­ம­ருக்கு தலா $300 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இரண்­டாம் கட்ட தளர்வு நடப்­புக்கு வந்­த­தைத் தொடர்ந்து சுற்­றப்­ப­ய­ணி­க­ளி­டையே பிர­ப­ல­மான கடை­க­ளி­லும் லிட்­டில் இந்­தியா போன்ற இடங்­க­ளி­லும் சிங்­கப்­பூர் பய­ணத்­துறை வாரி­யம் கண்­கா­ணிப்­பைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

தீபா­வ­ளியை முன்­னிட்டு லிட்டில் இந்­தி­யா­வில் கூட்­டத்­தைச் சமா­ளிக்க உச்ச நேரங்­களில் கூடு­த­லான அம­லாக்க அதி­கா­ரி­களும் பாது­காப்பு இடை­வெ­ளியை உறுதி செய்­யும் தூது­வர்­களும் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­வ­தாக வாரி­யத்­தின் கலை, கலா­சார இடங்­கள் பிரி­வின் இயக்­கு­நர் செரின் டான் தெரி­வித்­தார்.

பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிப்­பது போன்ற அனைத்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் மக்­கள் பின்­பற்ற வேண்­டும் என்று திரு­மதி டான் குறிப்­பிட்­டார்.

முந்­தைய ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பு­நோக்க, கடந்த இரு வார­யி­று­தி­களில் லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்டம் சற்று குறை­வாக இருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு கண்­ட­றிந்­தது.

இருந்­தா­லும், தீபா­வளியை முன்­னிட்டு பொருட்­கள் வாங்க மக்­கள் லிட்­டில் இந்­தி­யா­வுக்­குச் செல்­வ­தால் கடை­களில் வியா­பா­ரம் சூடு­பி­டித்­துள்ளது.

கொவிட்-19 சூழ­லைக் கருத்­தில் கொண்டு இவ்­வாண்டு கேம்­பல் லேனில் தீபா­வ­ளிச் சந்தை அமைக்­கப்­ப­ட­வில்லை.